Saturday, August 28, 2021

அரசாங்கத்தின் கையை மீறிப் போயுள்ள கொரோனா பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு தான் என்ன ?

உலகில் தினமும் தொற்றுக்குள்ளான நபர்கள் 

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்கொரோனோ அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்துக் கொண்டிருந்தது கட்டுநாயக்க விமான நிலையத்தின்  குடிவரவு நுழைவு பீடத்தில்  முகக் கைவசம் , கையுறை  எல்லாமே அணிந்து பணியாற்றி கொண்டிருந்தேன். என்னிடம் வந்த பயணி ஒருவர் முதலாவதாக என்னிடம் கேட்ட கேள்வி " நீங்கள் இப்போது அணிந்திருக்கும்  முகக் கவசம், இங்கு உண்மையில் ஒரு கொரோனோ தொற்றாளர் வரும்போது  உங்களை முழுமையாக பாதுகாக்கும்  என்று நம்புகிறீர்களா? " எனக்கு முன்பாக அவரே அதற்கான பதிலையும் தந்தார். தான் வைரஸ் தொடர்பிலான ஆய்வு துறையில் பணி புரியும் ஒரு ஆய்வாளர்   என்று தன்னை அறிமுகப்படுத்தியதுடன் கொரோனா என்பது வைரஸ் உடன் தொடர்புபட்ட நோய் வைரஸ் மிகவும் நுண்ணியது இதன்  பரவலுக்கு மிகச் சிறு இடைவெளியே போதுமானது நீங்கள் ஒன்றன் மேலே ஒன்றாக ஐந்து மாஸ்க் போட்டால் கூட அது பயனை தரும் என்று கூற முடியாது. எதாவது ஒரு வழியில் உங்கள் உடலில் வைரஸ் சென்று விடலாம்.

உண்மையில் வைரஸ் இடமிருந்து உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு எதிராக உங்கள் உடல் தானாகவே எதிர்த்து போராட வேண்டும். எனவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரித்துக் கொள்ளுங்கள் என்று அதற்கான வழமையான உணவு வகைகள் விட்டமின்களை பற்றி பரிந்துரைத்து  விடை பெற்றார். 

 


உலகளாவிய நாளாந்த கொரொனோ இறப்புக்கள்  


அந்த சம்பவம் நடந்து இன்று 20 மாதங்கள் ஆகி விட்டது. அவர் கூறிய விடயங்கள் யாவும் தெளிவான உண்மை என்பது தற்போது  அவதானித்து வரும் சம்பவங்களின் மூலமாக மிக தெளிவாக புரிகிறது.

 கொரொனோ வில் இருந்து பாதுகாப்பு பெறும் வழி தொடர்பில் வைத்தியர்கள் உட்பட ஒவ்வொருவரும் பல்வேறு ஆலோசனைகளை கூறுகிறார்கள் ஆனால்  அதை கூறும் நபர்களே அதில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

இன்றுவரை எத்தனை பிரபல்யங்கள், வைத்தியர்கள்  இதன் காரணமாக இறந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் இந்த மாஸ்க் அணிதல்கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்காமல் மறந்து போய்  இருந்து இருப்பார்களா? அல்லது அவர்களால் இதற்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பெற முடியாமல் போய் இருக்குமா? இவ்வளவு இருந்தும் கூட ஏன் அவர்களுக்கு இந்த நிலை வர வேணும்?

உண்மையில் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெறுமனே சுகாதார நடைமுறைகளை கையாளுவது மாத்திரம்  போதுமானதாக இல்லை. எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பேணுவது  மட்டுமே இதற்கான ஒரே ஒரு தீர்வு

இலங்கையில் இன்றைய சூழ்நிலையில் இந்த வைரஸ் பலவேறாக திரிவடைந்து பரவி காணப்படுகிறது. வீட்டில் இருந்து வெளியே சென்று வரும் கணிசமானவர்களின் உடலில் ஏதோ ஒருவகையில் இந்த வைரசின் தாக்கம் காணப்படும். அது அவர்கள் மூலமாக அவர்கள் வீட்டில் இருப்பவர்களையும் சென்றடைகிறது.

இலங்கையின் இன்றைய நிலவரம் 



வைத்தியசாலையில் அதன் கொள்ளளவை மிஞ்சிய நோயாளிகள்..! அதனை விட வைத்தியர்கள், தாதிகள் உட்பட பெரும்பாலான ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ள நிலையில் ஆளணிப் பற்றாக்குறை வேறு நிலவுகிறது. இதனை விட நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், தேரர்கள் என்று அனைவரினதும் எச்சரிக்கையைக்  கண்டு பயத்தில் அரசு இறுதியாக இப்போது தான்  பொது முடக்கத்தை அமுல்படுத்தினாலும்  சாதாரண மக்களால் இந்த முடக்கத்தை தாங்க முடியாமல் வெளியே வரும் சூழல் ஏற்கனவே உருவாகி விட்டது. அது தவிர்க்க முடியாததும் கூட ..!

இந்த நிலையில் எந்த நேரத்திலும் எம்மில் எவரும் மிக இலகுவாக இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிப்பை எதிர்கொள்ள முடியும். ஆகவே   அதை எதிர்கொள்ள எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடிப்பதற்கும்குளிப்பதற்கும் சூடான நீரை மட்டும் பயன்படுத்தல்அடிக்கடி  நீராவியை சுவாசித்தல் , உப்பு நீரால் தொண்டையை நன்றாக அலசி கொப்பளித்தல் என்பன மிகவும் பயன் மிக்கவை.  இதனை விடவும்  உடலில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு விட்டமின் D  சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இயற்கையாகாவே எம்மால் பெறமுடிந்த   எலுமிச்சைதேன்உள்ளிமிளகுஇஞ்சி போன்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சூப், ரசம்  போன்ற பானங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்துடன் இவற்றை அருந்தும்போது தானாகவே எமது உடலில் சேரும் நீரின் அளவும் அதிகரிக்கும் ஆகவே இது மிகவும் பயன் தரும்.

எமது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படாமல் இருக்கும் போது எமது உடல் இயல்பாகவே இதனை எதிர்த்து போராடும். உடலில் வேறு நோய்களின் தாக்கம் இருப்பவர்கள் கூட இவற்றை சரிவரக் கடைப்பிடிக்கும் போது நிச்சயமாக இந்த வைரசை எதிர்க்க முடியும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் கூட இப்படியான நடைமுறைகளே பேணப்படுகின்றன. 

என்ன தான் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மாஸ்க் அணிந்து கைகளை கழுவி சென்றாலும் கூட  அது நோயின் பாதிப்பை குறைக்குமே ஒழிய அதில் இருந்து தீர்வு தரப் போவதில்லை ஆகவே தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் அதே நேரம் மேற் குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எம்மையும் எம்மை சுற்றி இருப்பவர்களையும் இதில் இருந்தது பாதுகாத்துக்கொள்ள முடியும்.






No comments:

Post a Comment