Monday, December 19, 2016

இணைய ஊடகங்களின்அண்மைய போக்கு



இணையத்தில்  ஒரு  டொமைன் வைத்திருந்தால் போதும்  உடனே தம்மை எல்லாம் ஊடகவியலாளர்  என்று சொல்லும் நிலைமை இன்று பெருகி விட்டது. அதில் தவறில்லை அனால் இதற்காக தாம் பிரசுரிக்கும் அனைத்து குப்பைகளையும் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் வேலைதான் சகிக்க முடியாதது.

“பரபரப்பு”,”அதிர்ச்சி“,”எச்சரிக்கை”,“நற்செய்தி”,

"உண்மையா”,”அபாயம்”,”ஆபத்து”,

”அதிரடி”,”சிக்கல்”,”பயங்கரம்”,”கவனம்”,


”கவனத்திற்கு”,”தெரியுமா”,”சற்று முன்னர் “

இணையத்தில் இப்போது இத்தகைய சொற்களை சகல இடங்களிலும் காண முடியும் . செய்தி மிக அற்பமானதாக இருக்கும் அனால் அதனை கிளிக் செய்து வாசிக்க வேண்டுமே என்பதற்காக  இவ்வாறாக ஒரு சொல்லை இணைத்து மக்களை ஈர்க்க நினைக்கும் இவர்களது ஈனத்தனத்தினை எப்படிப் பொறுப்பது என தெரியவில்லை. அவர்கள் தான் அதை செய்கிறார்கள் என்றால் அதனை எமது சில நண்பர்கள் ஏனையவர்களுடன் பகிருகிறார்கள் இதனை விட பேஸ்புக் இல் கட்டணம் செலுத்தி தம்முடைய பக்கத்தினை புரமோட் செய்யும் போது அவைகளும் எமது டைம்லைன் ஐ நிறைக்கின்றன. சரி பிரபலமில்லாத தாமும் பிரபலமாக விரும்பும் இணையங்கள் தான் இந்த வேலையே செய்கின்றன என்றால் தற்போது இந்த வருத்தம் அனைத்து ஊடகங்களையும் ஆட்கொண்டு விட்டது பாரிய வாசகர்கள் கொண்ட தமிழ் ஊடகங்கள் கூட  இதையொத்த செய்திகளையே வெளியிடுகின்றன.  இவற்றினை நம்பி வாசிப்போர் இவற்றை விடும்வரை இவை ஒருபோதும் ஓயாது தொல்லையாகவே விளங்கப்போகின்றன.




No comments:

Post a Comment