Wednesday, November 9, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் எமது சமூகத்தின் மனநிலையும்


மானிட சமூகத்தில்  எப்போதும் கிணற்றுத்தவளை போல சிந்திக்கும் மனநிலையே பொதுவாக காணப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தம்முடைய நலன்கள் எவ்வாறாயினும் நிறைவேற்றப்பட வேண்டும். மற்றவருடைய மனநிலையில் இருந்து யாரும் சிந்திப்பது கிடையாது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளிண்டனின் தோல்வி அல்லது ட்ரம்பின் வெற்றி   எம்முடைய தமிழ் முஸ்லீம் சமூகத்தில் எதோ பாரதூரமான சம்பவம் நிகழ்ந்து விட்டதைப்போன்ற தோற்றப்பாட்டை எழுப்பியுள்ளதை எமது  சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. ட்ரம்பின் இஸ்லாமிய எதிர்ப்பு நிலை முஸ்லீம் மக்களிடத்தில் அவர் மீதான ஆத்திரத்தையும் கிளாரியால் தமக்கு எதாவது நன்மைகள் கிட்டலாம் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையையும் தவிர இந்த தேர்தல் பற்றி கவலைப்பட உண்மையில் எமக்கு எதுவும் இல்லை.


டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை பற்றி அவருக்கு வாக்களிக்காத அமெரிக்க மக்கள் கூட இவ்வளவு தூரம் பொருட்படுத்தி இருக்க மாட்டார்கள். என்னதான் பண பலம் இருப்பினும் ஏறத்தாழ 5 கோடி அமெரிக்கர்களின் வாக்குகளை ட்ரம்பால் அவ்வளவு இலகுவாக பெற்று இருக்க முடியாது. ஒபாமாவின் ஆட்சிக்காலம் அமைதியானதாக இருந்த போதிலும் சர்வதேச பொலிசாராக பார்க்கப்படும் அமெரிக்கர்களுக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. தமது பலத்தினை மீண்டும் ஒருமுறை பறைசாற்றக்கூடிய ஒருவர் அவர்களுக்கு  தேவைப்பட்டு இருக்கிறார் அது ட்ரம்பின் வடிவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment