Sunday, November 15, 2015

பாரீஸ் நகர தாக்குதல்கள்

நவம்பர் 13 2015 உலக சம்பியன் ஜேர்மனிய அணிக்கு எதிராக பிரான்ஸ் பெற்ற வெற்றியை கொண்டாட முடியாத நிலைக்கு அந்நாட்டு மக்களையும் ஏனைய உதைபந்தாட்ட ரசிகர்களையும் மாற்றிய நிகழ்வு தான்  பாரிஸ் நகரில் இஸ்லாமிய ஆயுத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்.


மற்றுமொரு செப்டம்பர் 11 அல்லது அதனை விட மோசமான தொரு  நிகழ்வாக கடந்த 13 ம் திகதிய தாக்குதல் மேற்கத்தேய ஊடகங்களால் இது  பார்க்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் இஸ்லாமிய போராட்டக் குழுவினரால் பாரிஸ் நகரில்  மேற்கொள்ளப்பட்ட  மூன்றாவது  தாக்குதலாக இது  விளங்குகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 7 ம் 9 ம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் சுமார் இருபது உயிர்களை பறித்திருப்பினும் அது   நபிகளின்  கேலிச்சித்திரத்துக்கான எதிர் வினையாகவே  பார்க்கப்பட்டது. அனால் இம்முறை விடயம் வித்தியாசமானது இலக்கு வைக்கப்பட்டவர்கள் முற்று முழுதான அப்பாவி பொதுமக்கள் .


அன்றைய தினம்  பிரான்ஸ் பிரதமர் உட்பட சுமார் 80000 மக்கள் கூடியிருந்த உதைபந்தாட்ட மைதானத்தில் இது நிகழ்ந்திருந்தால் இதன் விளைவுகள் இன்னும் மோசமாக போயிருக்கும்.




அவ்வளவு மக்களையும் பதட்டமின்றி பாதுகாப்பாக வெளியேற்றிய பெருமை பிரான்ஸ் பாதுகாப்பு தரப்பினையே சாரும்.


தம்மை இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் ISIS அமைப்பு இந்த தாக்குதலின் மூலம் இஸ்லாம் உலகின் அனைத்து சமூகங்களில் இருந்தும் கடும் எதிவினையை எதிர்நோக்கியுள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய மக்களின் மீது பிரான்ஸ் உட்பட மேற்கத்திய நாடுகளில் நிலவும் கண்ணோட்டம் இந்த தாக்குதலின் காரணமாக மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை பலஸ்தீனத்தில் இடம்பெறும் தாக்குதலுடன் ஒப்பிட்டு  முஸ்லீம் தரப்பினர் சிலர் இதனை நியாயப்படுத்த முயல்கிறார்கள். சமூக வலையமைப்புகள் இந்த சம்பவத்தினை மற்றுமொரு கட்டத்துக்கு எடுத்து செல்லுகின்றன .

ஒட்டுமொத்தத்தில் மதவாதம் அதிலும் அடிப்படை வாதம் உலகில் இருந்து நீக்கப்படும் வரை என்ன தான் நவீன வளர்சிகள் ஏற்பட்டாலும் உலகின் போக்கினை மாற்றவே முடியாது.

No comments:

Post a Comment