Tuesday, April 12, 2016

விளையாட்டு பகிர்வு - இலங்கை கிரிக்கெட் எதிர்காலம், ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் இதுவே நான் முதல் முதலில் பதிவிட்ட விடயம்  2011 உலக கிண்ணப் போட்டி தோல்வியை தொடர்ந்து நான் வெளியிட்ட முதல் பதிவு அது. இன்று ஏறத்தாள ஐந்து  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே தலைப்பினை என்னுடைய பதிவின் பாதியாக உள்ளடக்கியுள்ளேன் மீதி தற்போது நான் விரும்பி பார்க்கும் உதைபந்தாட்டத்துக்கு ஒதுக்கியுள்ளேன். இலங்கை அணியின் தற்போதைய நிலையை பார்க்கும்போது மீண்டுமொருமுறை நான் இது பற்றி பதிவிடவேண்டிய அவசியம் தோன்றாது போலுள்ளது.



2011 உலக கிண்ண தோல்வியை தொடர்ந்து நான் நான் குறிப்பிட்ட இளம் தலைவர்  நியமனமாக மத்தியூசின் நியமனம் அமைந்தது. இன்று அணியில் இடம்பிடிக்கக்கூடிய ஒரே தகுதி வாய்ந்த வீரராக அவர் ஒருவரே விளங்குகிறார். 2011 உலக கிண்ணப் போட்டியின் பின்னர் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்த்த மகேல,சங்கா,டில்சானில் முன்னைய இருவரும் 2015 இல் ஓய்வு பெற டில்சான் இன்றும் வேறு தெரிவில்லாத காரணத்தினால் அணியில் விளையாடி வருகிறார். அணியில் அப்போது சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்த்த திரிமானியவும் சந்திமாலும் உபதலைவர்/தலைவர்  பதவி வரை சென்று விளையாடிய போதும் இன்றுவரை எந்தவித நம்பிக்கையும் ஏற்படுத்த வில்லை மற்றொரு வீரரான திமுத் கருணாரத்னா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக நாட்டை பிரதிநிதிதுவம் செய்து வெறும் 35  என்ற சராசரியையே கொண்டுள்ளார்.  அதில் குறிப்பட்ட ஏனைய இளம் வீரர்களுக்கு ஒழுங்காக சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லை .





பழைய கதை முடிந்தது தற்போது என்ன செய்வது என்பதே பாரிய கேள்வி எதுவரை இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை மத்தியூஸ்  தவிர பந்து  வீச்சில் சமீரவும் வண்டர்சியும் ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறார்கள்(2016 T20 உலககிண்ணப்போட்டிகளை பொறுத்தவரை மட்டும் ) ஏனைய இடங்கள் எப்படி நிரப்புவது? . அணித் தேர்வாளர் பதவிக்கு மீண்டும் ஜெயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது அர்ஜுனா மகிந்த நாட்டை கேட்பது போல கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை கேட்கிறார். இவை  எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை . சரி அடுத்த விடயத்துக்கு வருவோம் 

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 

கடந்த உலககிண்ண கிரிக்கெட்  போட்டியின்  தோல்வி இலங்கையின் வெற்றியை எதிர்பார்த்து சந்தோசமடைவதிலும் பார்க்க இந்தியாவின் தோல்வியில் இன்பம் காணும் ஒருவனாக மாற்றி என்னை கால்பந்தாட்ட பக்கம் துரத்த இப்போது முழுமையாக கால்பந்து உலகு என்னை ஆட்கொண்டு விட்டது  அந்த வகையில் தற்போது இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் யூரோப்பா லீக்க்குகள் பற்றி சொல்வதானால் இரண்டு கிண்ணக்களினதும் பரபரப்பான காலிறுதி ஆட்ட்டங்களின் இரண்டாம் சுற்றுக்கள் தற்போது இடம்பெற உள்ளன. 

சம்பியன்ஸ் லீக் போட்டிகளை எடுத்தால் நான்கு காலிறுதிகளும் மிகவும் இறுக்கமான நிலையை அடைந்துள்ளன முன்னால் சம்பியன்களான பார்சிலோனா,ரியல் மாட்ரிட் , பெயார்ன் முனிச் என்பன அரையிறுதிக்கு முன்னேற கடும் சவாலை எதிர்கொண்டுள்ளன அதே நேரம் பாரிய நிதிவளம் கொண்ட மான்செஸ்டர் சிற்றி, பாரிஸ் செயின் ஜெர்மன் தம்முடைய முதலாவது அரையிறுதிக் கனவுடன் ஒன்றை ஒன்று எதிர்கொண்டுள்ளன .

யுரோப்பா கிண்ணப்போட்டிகளை பொறுத்தவரை தற்போதைய சூழலில் கிண்ணத்தை கைபற்றும் என எதிர்பார்த்த பொருசியா டோர்ட்மன்ட் லிவர்பூல் இரண்டும் துரதிஸ்டவசமாக ஒன்றை ஒன்று சந்திக்க உக்ரெயின் நாட்டு கழகமான ஷக்தார் டானெக்ஸ் தம்முடைய இருப்பினை ஏறத்தாள உறுதிப்படுத்த முன்னால் சம்பியன் செவில்லா தம்முடைய நாட்டின்  மற்றுமொரு கழகமான அட்லேடிக் கிளப் கழகத்தை வீழ்த்தி இன்னுமொரு ஸ்பெயின் கழகமான விலாரலுடன் அரையிறுத்திக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது . 

ஏற்கனவே இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டியின் எதிர்பாராத அதிர்ச்சி மிகு வெற்றிகளை போன்று இந்த ஐரோப்பிய கிண்ணப்போட்டியிலும் சில சமயம் சிறிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தக் கூடிய சூழ்நிலை மிக பிரகாசமாகவே உள்ளது.

1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - Mapyro
    View map 서귀포 출장마사지 of Borgata Hotel 안동 출장샵 Casino & 전라남도 출장샵 Spa, Atlantic City, including elevation 이천 출장샵 maps, street parking, parking 의왕 출장마사지 meters and private garages.

    ReplyDelete