Wednesday, April 2, 2025

2025 ஏப்பிரல் ...


சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி   இடம்பெறவுள்ள இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்னமும் சூடு பிடிக்கவில்லை நிராகரிக்கரிக்கப்  வேட்புமனுக்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்புக்கள் ஒவ்வொன்றாக வெளியாகியுள்ள நிலையில் ஏற்கனவே ஜனாதிபதி,பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி இதிலும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளே காணப்படுகின்றன.  ஆறு மாதமாகியும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்ற குறைபாட்டினை அண்மைய முன்னைய ஆட்சியாளர்களின் கைது நடவடிக்கைகள்   மாற்றப் போகிறது.

சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்களில் எதிர் தரப்பு சஜித்,ரணில்,நாமல் அணியினரின் எவருக்குமே எந்தவொரு சபையையும் தனித்து கைப்பற்ற முடியாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கு கிழக்கில் பொது மக்களிடம் சென்று வாக்கு கேட்கவே முடியாத நிலையில் இருந்த தமிழ், முஸ்லீம் கட்சிகளுக்கு ஆனையிறவு ரஜ உப்பும், இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்டி கைது செய்யப்பட்ட முஸ்லீம் நபரும் சிறு துரும்பாக கிடைத்து உள்ளது. ஆயினும்  வட கிழக்கில் இதுவரை எந்தவொரு சபைகளிலும் ஐந்து சதவீத வீதமான வாக்கு கூட இல்லாத தேசிய மக்கள் சக்தி இம்முறை சகல சபைகளிலும் குறைந்தது எதிர்கட்சியாக ஆவது வருவது உறுதி.



எப்படி 1970 க்கு பின்னர் 1994 வரை உலக கிண்ண வெற்றிக்காக காத்திருந்தார்களோ அப்படியான ஒரு நிலை 2002 க்கு பின்னர் பிரேசிலுக்கு ஏற்பட்டுள்ளது 24 வருடங்களாக காலிறுதி,அரையிறுதியை தாண்ட முடியாத அணி இம்முறை தென்னமரிக்கா தகுதி சுற்றிலேயே தடுமாறி வருகிறது. இறுதியாக  அண்மையில் இடம்பெற்ற அர்ஜென்டினா அணியுடனான 4-1 என்ற படு தோல்வி 2022 உலக கிண்ணத்துக்கு பின்னரான நான்காவது பயற்சியாளரை தேடும் நிலைக்கு தள்ளியுள்ளது இன்னமும் சரியாக ஒரு வருடம் இருக்கும் நிலையில் புதிய பயற்சியாளர் மீது பாரிய பொறுப்பு சுமத்தப்படும், தற்போதய நிலையில் முன்னணி வகிக்கும்  உலக தர முன்கள வீரர்களான  பார்சிலோனாவின் ரபின்ஹா ரியல் மட்ரிட் ​​வினீசியஸ் தமது கழக போட்டிகளில் வெளிப்படுத்தும் திறமையை இன்னமும் முற்று முழுதாக தேசிய அணியில் காட்டாமை பாரிய குறைபாடாக உள்ளது ரொனொல்டோவுக்கு பின்னர் சர்வதேச ரீதியில் அணிக்கு பெருமையை தேடி தந்த நெய்மரின் இறுதி உலக கிண்ணமாக இது இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்காக கூடிய கோல்களை அடித்து பேலை யின் சாதனையை முந்தினாலும் கூட அவரது மூன்று கிண்ணங்களுடன் ஒப்பிடும் போது ஒரு உலக கிண்ணத்தை கூட வென்றெடுக்க முடியாத நிலையில் நெய்மரின் ஓய்வு அமையப் போகிறதா என்பது ஒரு பிரேசில் ரசிகனாக ஒரு கவலைதரும் கேள்வி/