Thursday, June 14, 2018

2018 பீபா உலகக் கிண்ணத்தை வெல்ல போட்டி போடும் நான்கு முக்கிய அணிகள்

எனது முன்னைய பதிவான பிபா உலகக்கிண்ணம் 2018 ஒரு முன்னோட்டம் ஊடக ஏற்கனவே  அறையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகள் தொடர்பில் பாத்திருந்தோம். அந்த வகையில் இப்பதிவு அந்த அணிகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது. பந்தயக் காரர்கள்   தொடக்கம் முக்கிய உதைபந்தட்ட ஊடகவியலாளர் வரை இம்முறை கிண்ணம் வெல்லக் கூடிய அணிகளாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரேசில்  ஆகியவற்றை குறிப்பிட்டு இருந்தார்கள் அதன் அடிப்படையில் அந்த நன்கு அணிகள் தொடர்பில் இந்த பதிவு ஆராய்கிறது.

ஸ்பெயின்2010 இல் முதல் தடவையாக உலக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணி இம்முறையும் அதனையொத்த எதிர்பார்ப்புடன் இம்முறை களமிறங்கியுள்ளது. கடந்த இரு வருடங்களாக  எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத அணியாக இதனை கொண்டு சென்ற பயிற்சியாளர் ரியல் மட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட சர்ச்சை காரணமாக இரு நாட்களுக்கு முன்னர் விலக்கப்பட்டுள்ளார். இது ஓரளவுக்கு அணியின் மன நிலையை பாதித்தாலும் அவருக்கு உதவியாகவும் முகாமையாளராகவும் செயற்பட்ட புதிய பயற்சிவிப்பாளர் தொடர்ந்தும் அதே பாதையை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் வீரர்களை எடுத்துக் கொண்டால்  தற்போதைய நிலையில் உலகின் தலை சிறந்த கோல் காப்பாளரான மன்செஸ்டர் யூனிட்டெட் வீரர்  டேவிட் டி  கா யாவையும் மத்திய பின்களத்தில் ரியல் மட்ரிட்டின்  செர்ஜியோ  ரொமாஸ் , பார்சிலோனாவின் ஜெரார்ட்  பீகே, வலது இடது பின்களத்தில்   ரியல் மட்ரிட்டின்  டேனி  கார்வஜால், பார்சிலோனாவின் ஜோர்டி  ஆல்பா என மிகப் பலம் வாய்ந்த தடுப்பரண் காணப்பட மத்திய களத்தில் பார்சிலோனாவின் செர்ஜியோ  புஸ்கிட்ஸ், பெயார்ன் முனிசின்  தியாகோ  அலகான்ட்ரா அட்லெடிகோ  மாட்ரிட் கொக்கே   ஆகியோரையும் மத்திய முன்களத்தில் பார்சிலோனாவின் அண்ட்ரெஸ்  இனியெஸ்டா, மன்செஸ்டர்  சிட்டியின் டேவிட் சில்வா,  ரியல் மட்ரிட்டின்  இஸ்கோ  ஆகியோர் அசைக்க முடியாத வீரர்களாக திகழ்கிறார்கள். இருப்பினும் அட்லெடிகோ  மாட்ரிட் வீரர் டிகோ கோஸ்டாவை பிரதான வீரராக முன்களம்  இன்னமும் நிரந்தரமில்லாது காணப்படுகின்றமை அணியின் பலவீனமாக கருதப்படுகிறது. ஆயினும் திட்டமிடப்பட்ட ஸ்ட்ரைக்கர் இல்லாமல் விளையாடும்போது அவர்களால் அதை ஈடு செய்ய முடியும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

பிரான்ஸ்


1998 இல் சாம்பியனான பிரான்ஸ் இம்முறை 11 இடங்களிலும் தலை சிறந்த வீரர்களை கொண்டு நிரப்பியுள்ள அணியாக விளங்குகிறது. 1998 உலக சம்பியன் அணியின் தலைவரான டிடயர் டேஸ்சம்ப்ஸ் ஐ பயிற்சியாளராக கொண்ட  பிரான்ஸ் அணியில்  அனுபவம் வாய்ந்த அணித்தலைவராக  டோட்டன்ஹாம்  ஹோட்ஸ்புர் வீரர் ஹுகோ  லோரிஸ்  மத்திய பின்களத்தில் பார்சிலோனாவின் உம்திட்டி , ரியல் மட்ரிட்டின்  ரபேல்  வரனே , வலது இடது பின்களத்தில்   மொனாகோவின் டிஜிபிரில்  சிடிபே, மான்செஸ்டர்  சிட்டியின் பெஞ்சமின்  மெண்டி, மத்திய களத்தில் மான்செஸ்டர்  யூனிட்டேட் போல் போக்பா, ஜுவென்ட்ஸ் வீரர்  ப்ளாயிஸ்   மதூடி ,   செல்சியாவின்    ங்கொலோ  கண்டே, முன்களத்தில் அட்லெடிகோ  மாட்ரிட்  அந்தோனி   கிறிஸ்மன், பாரிஸ்  செயின்ட் ஜெர்மன் கேய்லியன் ம்பாபே   பார்சிலோனாவின் ஒஸ்மானி  டேம்பேலே என மிகப் பலமான அணியைக் கொண்டுள்ளது.  ஒவ்வொரு வீரரும் தத்தமது கழகங்களில் நட்சத்திர அந்தஸ்தினை கொண்டுள்ளமை இங்கு முக்கியமானதாக கொள்ளப்படுகிறது. அந்த வகையில் அணித் தெரிவு மிக சவால் மிக்கதாக பயிற்சியாளருக்கு அமைவதுடன்  அணியில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் பெஞ்ச்சில் பதில் வீரர்தன்னை ஒத்த திறனைக் கொண்டுள்ள நிலையில்  எப்படியாவது  தம்மை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன்நான்கு முறை உலக கிண்ணத்தை வென்றதும் நடப்பு சாம்பியனுமான ஜெர்மன் அணி  ஆர்ஜன்டீனா, பிரேசில் அணிகளுக்கு பிறகு அடுத்தடுத்து உலக கிண்ணத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இம்முறை களமிறங்குகிறது. உலக கிண்ணத்துக்கு முன்னோடியாக இடம்பெறும் கொண்பெடரேசன் கோப்பையை தனது இரண்டாம் தர அணியை பயன்படுத்தி கைப்பற்றிய ஜெர்மன்  2002 தொடக்கம் தொடர்ச்சியாக  குறைந்தது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதுடன்  உலக கிண்ண வரலாற்றில் கூடிய திறமைகளை வெளிப்படுத்திய அணியாகவும் விளங்குகிறது. இம்முறை அணியை எடுத்து நோக்கினால் கடந்த முறை போன்று கூடுதலான பெயார்ன் முனிச் வீரர்களை இம்முறையும் அணி உள்ளடங்கியுள்ளது அந்த வகையில் கோல் காப்பாளராக  மானுவல்  நேயர் மத்திய பின்களத்தில் ஜெரோம்  போட்டேங் , மட்ஸ்  ஹம்மெல்ஸ்  வலது பின்களத்தில் ஜோஷுவா  கிம்மிச் முன்களத்தில் தோமஸ்  முல்லர்   ஆகியோர் பெயார்ன் முனிச் அணியில் இருந்து விளையாட மத்திய களத்தில் மான்செஸ்டர்  சிட்டியின் இல்க்காய்  குண்டோகன் , ஜுவென்ட்ஸ் வீரர் சமி  கதிரா   , ரியல் மட்ரிட்டின்  டோனி  க்ரூஸ் , மத்திய முன்களத்தில்  பாரிஸ்  செயின்ட் ஜெர்மனின்  ஜூலியன்  ட்ரஸ்ட்லெர், ஆர்சனலின்  மெசூட்  ஒஜில், போறிசா டார்ட்மண்ட் அணியின்    மார்கோ  ரேஸ் ஆகியோரும்   முன்கள வீரராக  ரெட்புள் லேப்ஜிக் வீரர் டிமோ  வெர்னர்  அணியில் இடம்பெறுகிறார். இம்முறை இங்கிலாந்து பிரிமியர்கோப்பையை  மான்செஸ்டர்  சிட்டி வெல்ல முக்கிய பங்காற்றிய  லிறோ சானே கூட  இறுதி அணியில் இடம்பிடிக்க முடியாமை அணியில் பலத்தை பறை சாற்றுகிறது.  ஆயினும்  காயம் காரணமாக பல மாதங்களாக விளையாடாத மானுவல்  நேயர் மாத்திரமே சில வேளைகளில் அணியின் பலவீனமாக அமையலாம்.

பிரேசில்
ஒவ்வொரு முறையும் உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதியை பெற்ற ஒரே அணியாக ஐந்து முறைகள் உலக கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி விளங்குகிறது. அந்த வகையில் 2002 இன் பின்னர் இம்முறை  எப்படியாவது கிண்ணத்தை வெல்லும் எதிர் பார்ப்பில் களமிறங்கும் பிரேசில் பந்தயக் காரர்கள்  பெரும்பாலானவர்களின் முதல்  தெரிவாக விளங்குகிறது. அந்த வகையில் அணியை எடுத்துக் கொண்டால் ஏற்கனவே கழக உலக  கிண்ணத்தை  கைப்பற்றிய பயிற்சியாளர்  டிடே  அணியின் பலமாக விளங்குகிறார். வழமையாக பிரேசில் அணியின் பலவீனமாக காணப்படும் கோல் காப்பு இம்முறை ரோமாவின் அலிசன் மூலமாக பலமாக மாறியுள்ளது. மத்திய பின்களத்தில் அனுபவம் வாய்ந்த முன்னால் அணித்தலைவர் செயின்ட் ஜெர்மனின்  தியாகோ  சில்வாவுடன்  இன்டர் மிலன் வீரர் மிராண்டா இடம்பெற வலது , இடது பின் களத்தில்  முறையே மான்செஸ்டர்  சிட்டியின் டேனிலோ , ரியல் மட்ரிட்டின்  மார்ஸலோ ஆகியோரும்  மத்திய களத்தில்  ரியல் மட்ரிட்டின்  கேஸேமிரா ,பார்சிலோனாவின் பவுலியோ  , மான்செஸ்டர்  சிட்டியின் பெர்னாண்டின்ஹோவும்  மத்திய முன் களத்தில்  செல்சியாவின் வில்லியன் , பார்சிலோனாவின் கொன்டின்ஹோ, முன் களத்தில் பாரிஸ்  செயின்ட் ஜெர்மனின்  நெய்மார் , மான்செஸ்டர்  சிட்டியின் கேப்ரியல்  ஜீசஸ் , லிவர் பூலின் ராபர்டோ  பிர்மினோ , ஜுவாண்டஸ் வீரர் டக்ளஸ்  கோஸ்டா என நட்சத்திர ஆட்டக் காரர்களை கொண்டிருக்கும் பிரேசிலுக்கு  இறுதி நேரத்தில் பாரிஸ்  செயின்ட் ஜெர்மனின் டனி அல்விஸ் காயம் காரணமாக விலகியமை வலது பின்களத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில் கடந்த பதிவின் தொடர்ச்சியாக என்னை பொறுத்தவரை அரையிறுதி , இறுதிப் போட்டி முடிவுகள்  பின்வருமாறு அமையலாம்.

அரையிறுதி முடிவுகள் இறுதி முடிவு இது வெறுமனே எனது தனிப்பட்ட கருத்துக் கணிப்பு மட்டுமே. இந்த கருத்தில் கணிப்பில் இடம்பெறாத சில அணிகள் கூட சில சமயம் இம்முறை கிண்ணத்தை  வெற்றி பெறலாம். அந்த அடிப்படையில் ஐரோப்பிய சம்பியன் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் கடந்த முறை மயிரிழையில் கிண்ணத்தை தவறவிட்ட லியனல் மெசியின் ஆர்ஜன்டீனா என்பவை இந்த வீரர்களின் தனிப்பட்ட திறமை காரணமாக அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் அதே போன்று கிண்ணங்களை கைப்பற்றிய  அனுபவம் இல்லாத வீரர்களின் மனநிலை என்ற ஒரே பலவீனத்தை வெற்றி கொண்டால் தற்போது எழுச்சி பெற்று வரும் அணியான பெல்ஜியம் அணியாலும் கிண்ணத்தை கைப்பற்ற முடியும். ஏறத்தாழ பெல்ஜியம் அணியின் அதே நிலையிலேயே இங்கிலாந்தும் உள்ளது மிகுந்த சவால் மிக்க போட்டித் தொடரான பிரிமியர் லீக்கில் திறமையை வெளிக்காட்டிய பல இளம் வீரர்களைக் கொண்ட இங்கிலாந்தால் கூட இது சாத்தியமானதே. கருத்துக் கணிப்புக்கள் எதுவாக இருப்பினும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையவுள்ள இத் தொடரின் வெற்றியாளரை இன்னமும் ஒரு மாதத்தில் அதாவது ஜூலை 15 அன்று  எம்மால் நேரடியாக அறிந்துகொள்ள முடியும்.


No comments:

Post a Comment