Sunday, March 15, 2015

உலக கிண்ண காலிறுதி முன்னோட்டம் - இலங்கையின் அதிஷ்டமும் தென்னாபிரிக்காவின் துரதிஸ்டமும் மீண்டும் தொடருமா?



இலங்கை, தென்னாபிரிக்கா கிரிக்கெடில் இரண்டும் ஒரு விடயத்தில் முற்றிலும் எதிர்மறையானவை. ஒருநாள் போட்டி தரப்படுத்தலில் எப்போதும் முதலாம்,இரண்டாம் இடங்களா வகிக்கும் தென்னாபிரிக்கா உலக கிண்ணம் உட்பட பெரும்பாலான இரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சுற்றுத்தொடர்களில் இறுதிப்போட்டிக்கு கூட வருவது அரிது அதேநேரம் தரப்படுத்தலில் சராசரியாக ஆறு, எழு இடங்களா வகிக்கும் இலங்கை(அண்மைக்காலமாக  மூன்று,நாலு இடங்கள்) உலக கிண்ணம், மூன்று நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இறுதிப்போட்டிவரை பலமுறை முன்னேறியுள்ளது.


இதனை விட முக்கியம் இரண்டு நாடுகளும் தமக்கு இடையில் விளையாடிய 59 போட்டிகளில் இலங்கை 29 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா  28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இரண்டு நாடுகளிலும் தென்னாபிரிக்கா தன்னுடைய  கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு பிறகு இலங்கையிடம் தான் கூடிய போட்டிகளை தோற்றுள்ளது. 



அதே நேரம் இலங்கை அணி தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களா வகிக்கும் முக்கிய அணிகளில் இங்கிலாந்துக்கு பிறகு தென்னபிரிக்கவுக்கு எதிராகவே கூடிய வெற்றி வீதத்தை கொண்டுள்ளது. 


இம்முறை அணிகளை எடுத்துக்கொண்டால் துடுப்பாட்டத்தில் இலங்கை சங்ககார ,டில்சான்,மகெல ஆகிய சிரேஸ்ட வீரர்களிலே பெரிதும் தங்கியுள்ளது. இவர்களை வீழ்த்திவிட்டால் தென்னாபிரிக்காவின் வெற்றி உறுதியாகிவிடும் மறுபுறம் தென்னாபிரிக்கா அதன் அணித்தலைவர் டீ வில்லியேர்சில் தங்கியுள்ளது ஆயினும் இலங்கை போன்று முழுப்பொறுப்பும் அவரை மட்டும் சாரவில்லை மில்லர் ,அம்லா, டு பிளசி முதலியோரும் இந்த உலககிண்ணத்தில் சதங்களை பெற்றுள்ளதோடு ரூஸ்வெல்ட் அதிரடியாக ஓட்டங்களை குவித்துள்ளார். 



பந்து வீச்சை பொறுத்தவரை ரங்கன கேரத் விளையாடாத விடத்து அது இலங்கை அணிக்கு பாரிய தாக்கமாக அமையும் இயல்பாக வேகப்பந்துக்கு சிறப்பாக செயற்படும் தென்னாபிரிக்கா சுழல்பந்து வீச்சுக்கு மட்டுமே சற்று திணறுவது வழக்கம் எனவே மலிங்க உட்பட இலங்கையின்  எந்த ஒரு வேகப்பந்து வீச்சும் பிரச்சினையை கொடுக்காது அதே நேரம் சுழல்பந்துக்கு சிறப்பாக செயற்படும் இலங்கைக்கு இம்ரான் தாகீர் பெரிய பிரச்சினையாக விளங்க மாட்டார் ஸ்டேன்,மோர்க்கல் போன்றவர்களே தென்னாபிரிக்கா நம்ப வேண்டும்.




இவற்றைவிட போட்டியின் போதான களத்தடுப்பும் முக்கியமானது தொடர்ந்து களத்தடுப்பில் சொதப்பும் இலக்கை காலிறுதியிலும் இதே தவறை செய்தால் தென்னாபிரிக்காவை தடுக்க முடியாது.
நாணய சுழற்சியில் வெற்றி பெரும் அணி துடுப்பாட்டத்தை தான் பெரும்பாலும் தெரிவு செய்யும் இரண்டாம் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தானின் குறைந்த இலக்கை கூட துரத்த முடியாத தென்னபிரிக்கவும் அவுஸ்திரேலியாவின் பாரிய இலக்கையும் துரத்த முயன்ற இலங்கையும் சில சமயம் தம் முடிவுகளை மாற்றலாம்.
மேலும் போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி சமநிலையில் முடிவுற்றால் தரப்படுத்தல் அடிப்படையில் தென்னாபிரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும். புள்ளிவிபரங்கள் எது எவ்வாறு இருப்பினும் அன்றைய தினம் சிறப்பாக செயற்படும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

No comments:

Post a Comment