Saturday, March 21, 2015

ரஜனி, விஜய் கட் அவுட்களுக்கு பாலபிசேகம் செய்து , IPL இல் சென்னைக்கு ஆதரவு வழங்கி பின் இந்திய கிரிக்கெட் அணியை எதிர்ப்பது சரியா?

உலக கிண்ண காலிறுதியில் இலங்கை வெளியேறிய அதே நேரம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக தளங்களில் இப்போது இலங்கைஇந்திய ரசிகர்களால் விவாதத்துக்கு உட்படும் விடயமாக மேற்குறித்த தலைப்பு காணப்படுகிறது. 





உலக அரங்கில் நாட்டின் தேசிய அணிக்கு எதிரான சமூகத்தவர்கள் அதிகம் இருக்கும்  நாடு எதுவென பார்த்தால் அது நிச்சயம் இலங்கையாகத்தான் இருக்கும் . இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட முஸ்லீம் மக்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு அதரவு வழங்கினாலும் இலங்கை நாட்டில் உள்ள கணிசமான  அளவு தமிழ் மக்கள் இந்திய அணிக்கும் முஸ்லீம் மக்கள் பாகிஸ்தான் அணிக்கும் தான்  தொடர்ந்து அதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களை விட ஒரு சிலர்  அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்க முதலிய வேறு நாட்டு அணிகளுக்கும் அதரவு தருகிறார்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரானவர்கள் மொழி சமயம் முதலியவற்றை முன்வைத்தே இந்திய அணிக்கும் சமயத்தை வைத்து பாக்கிஸ்தான் அணிக்கும் அதரவு தருகிறார்கள் தமிழராக இருப்பினும் பாக்கிஸ்தான் அணிக்கு அதரவு தெரிவிக்கும் ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.

சரி விடயத்துக்கு வருவோம் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் அதை நியாயபடுத்த பின்வரும் காரணங்களை முன்வைக்கிறார்கள்
·         தமது தாத்தா ,தந்தை காலத்தில் இலங்கை அணி பிரபல்யம் பெறவில்லை எனவே பரம்பரை பரம்பரையாக நாம் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
·         இலங்கை அரசாங்கம், இராணுவம் எம்மை ஒதுக்கியது எனவே நாம் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
·  இந்திய அணியில் தமிழர்கள்/இந்துக்கள் விளையாடுகிறார்கள் இலங்கையில் எவரும் இல்லை.

இவை ஒவ்வொரு கருத்தும் வேறு கருத்தால் தோற்கடிக்கப்படும் போது மற்றைய கருத்தை கொண்டு நியாயப்படுத்தப் பார்கிறார்கள். உதாரணமாக இந்திய ராணுவமும் எம்மை கொன்றது என்றால் எமது முப்பாட்டன் இந்திய ரசிகன்,சச்சின் எமக்கு கடவுள் எப்படி மதம் முக்கியமோ அவ்வாறு தான் இதுவும் என்பதாக அவர்களின் பதில் அமையும் . உண்மையை சொல்வதானால் இவர்கள் தாம் வாழும் மண்ணை மதிக்காதவர்கள் இதை சொன்னால் எமக்கு சுயாட்சி இல்லை எமது உரிமைகள் பறிக்கப்படும் நாட்டில் எவ்வாறு அணியை ஆதரிப்பது என இவர்களின் பதில் அமையும். இத்தகையவர்கள் இந்தியா அல்லது வேறொரு நாட்டுக்கு செல்லும் போது தம்முடைய ஒரே ஒரு அடையாளம் இலங்கை என்பதை புரிந்திருப்பார்கள் அல்லது புரியாதது போல நடிப்பார்கள்.


அடுத்து பாலாபிசேகம் செய்து இலங்கையை ஆதரிப்பவர்கள். இலங்கையில் பிறந்த தமிழ் மகனுக்கு இருக்கும் முக்கிய பொழுதுபோக்கு திரைப்படம் தமது மொழியில் இலங்கையில் தரமான படங்கள் வெளிவராத போது அவர்கள் இந்திய தமிழ் சினிமாவையே நம்ப வேண்டி ஏற்படுகிறது. இதன் காரணமாகவே தம்முடைய அபிமான நடிகர்களுக்கு பாலபிசேகம் செய்கிறார்கள் இது போன்ற முட்டாள்தனமான செயற்பாடை செய்யாவிட்டாலும் இங்கிலாந்தில்,அவஸ்ரேலியாவில் பிறந்த ஆங்கிலேயர்கள் அமெரிக்க நடிகர்களை,பாடகர்களை  இதே போன்றதொரு காரணத்துக்காக தூக்கி கொண்டாடும் போது அவர்கள் அமெரிக்காவுக்கு அதரவு அளிப்பவர்களாக மாறி விட மாட்டார்கள் அது வெளிப்படை உண்மை . அனால் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கும் இலங்கை மண்ணில் பிறந்தவர்கள் தம்மை ஏதோ இந்திய பிரஜை போன்ற ஒரு நினைப்பில் தம்முடைய நாட்டு நடிகர்களுக்கு இலங்கை ரசிகர்கள் பாலபிசேகம் செய்வாதாக கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது .

அடுத்த விடயம் சென்னை அணிக்கு இலங்கை ரசிகர்களின் அதரவு. பிரேசில்,அர்ஜென்டினா போன்ற நாடுகளில் பிறந்த உதைபந்தாட்ட ரசிகர்கள் தம் தேசிய அணிக்கு பிறகு கூடுதலாக ஆதரவு வழங்கும் அணி எனும் போது அது நிச்சயம் பார்சிலோனாவோ,ரியல்மட்ரிட் ஆகவோ  அல்லது செல்சியாகவோ இருக்கும் இந்த அணிகள் ஸ்பெயின், இங்கிலாந்தை சேர்ந்தவை எனவே இந்த அணிகளுக்கு அதரவு தெரிவிப்பவர்கள் தம்முடைய வீரர்கள், இவ்வணியில் விளையாடுகின்ற காரணத்தினால் அல்லது ஒரு சாதாரண விளையாட்டு ரசிகராகவோ தான் இவ்வணிகளுக்கு  அதரவு தெரிவிக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் டெனிஸில் பெடரர், நாடாளுக்கு அதரவு தெரிவிப்பவர்கள் சுவிஸ்லாந்து,ஸ்பெயின்  நாட்டவர்களை விட அதிகம். ஏன் இந்திய இலங்கை ரசிகர்கள் கூட உதைபந்தாட்டத்தில் வேறு நாட்டு கழக அணிகளுக்குதான் ஆதரவு வழங்குகிறார்கள். 


எனவே இலங்கையில் பிறந்திருந்தும் இலங்கை அரசாங்கம் வழங்கிய சலுகைகளை கொண்டு படித்தும் வேலை செய்யும் அவற்றை தமது வரிப்பணம் எனக்கூறி இந்திய அணிக்கு அதரவு அளிப்பதை நியாயப்படுத்தும் நபர்களுக்கு உரிய பதிலே இந்த பதிவு.

No comments:

Post a Comment