Thursday, February 15, 2018

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் சொல்வது எதனை வடக்கு கிழக்கு முடிவுகள் ஒரு பார்வை


ஒரு வழியாக உள்ளூராட்சி சபை தேர்தல் நிறைவடைந்து விட்டது இலங்கை மட்டத்தில் மகிந்தவிற்கு பாரிய வெற்றியை கொடுத்துள்ளது. வேறு எவரது ஆதரவு இன்றி தனித்து பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய அளவுக்கு பெரும்பாலான சபைகளில்  இம்முறை மகிந்தவிற்கு மக்கள் வாக்கினை வாரி  வழங்கி இருக்கிறார்கள். இதற்கு முந்திய பதிவில் மகிந்தமைத்திரி அணிகள் தனித் தனியே போட்டி இடுவது சுதந்திர கட்சியின் வாக்குகளை பிரித்து ஐ.தே.கட்சிக்கு சாதகமாக அமையுமா?   என்று கேள்வி எழுப்பி இருந்தேன் ஆனால் இதற்கான பதிலாக மகிந்தவின் வருகை  ஐ.தே.கட்சியின் வாக்கினை பிரித்து சுதந்திர கட்சிக்கு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் சுதந்திர கட்சியின் பெருபாலான வாக்குகள் மகிந்தவிற்கு கிடைக்க மகிந்த,ஐ.தே.கட்சியின் மீதான வெறுப்பு வாய்ப்புக்கள் மைத்திரிக்கு கிடைத்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி இதில் மிகவும் பிரதான பங்கினை வகித்துள்ளது. இதனை வெளிக்கொண்டுவர பிரதான பங்காற்றிய மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும்  பொதுமக்களால் ஏமாற்றப்படும் கட்சியாக தனது நிலையை தொடர்ந்துள்ளது.

தேசிய கட்சிகளின் நிலை இவ்வாறு இருக்க புதிய தேர்தல் முறைமையின் காரணமாக சிறிய கட்சிகள் குறிப்பிடத்தகு ஆசனங்களை பெற்றுள்ளார்கள் அந்த வகையில் மனோ கணேசன் 112 ஆசனங்களையும்  ரிசாட் பதூர்தீன் 160 ஆசனங்களையும் தனித்தும் சேர்ந்தும் பெற்றுள்ளார்கள் இதனை விட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகப்பகுதிகளில் தன்னுடைய செல்வாக்கினை மீளவும் நிருபித்துள்ளார்கள் அதே போன்று காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும்,அக்கரைப்பற்றில் அதாவுல்லாவும் பாரிய வெற்றியினை பெற்றுள்ளார்கள்.


தேர்தலில் குறைந்தது 100 ஆசனங்களையாவது பெற்றுக் கொண்ட கட்சிகளும் அவை பெற்றுக்கொண்ட ஆசனங்களும்


                                        
குறிப்பு        
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆசனங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
தமிழ் முற்போக்கு கூட்டணி,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவற்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் அவை இணைந்து பெற்றுக்கொண்ட ஆசனங்களும் தனித்து பெற்ற ஆசனங்களும் இணைத்து தரப்பட்டுள்ளது . 

வடக்கு கிழக்கில்....           
                                                               
நாடளாவிய நிலை இவ்வாறு இருக்க வடக்கு கிழக்கிற்கு வருவோமானால் இம்முறை பெரும்பாலான சபைகள் எந்தவொரு கட்சியினாலும் தனித்து வெல்லப்படவில்லை என்றே கூறமுடியும் சபையில் வெற்றி பெற்ற கட்சியை விட ஏனைய கட்சிகள் அரைவாசிக்கும் கூடுதலான உறுப்பினர்களை பெற்று இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் மாவட்ட ரீதியில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஆசன விபரங்கள்  கீழே தரப்பட்டுள்ளது.

வட மாகாணம் 
யாழ்ப்பாணம்



யாழ்ப்பாணத்தில் மொத்தமாக உள்ள 413 ஆசனங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 151 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது இது வெறுமனே 34% மாத்திரமாகும் இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈ.பி,டி,பி தலா 20% மான ஆசனங்களை பெற்றுள்ளார்கள். யாழில் உள்ள 18 உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

கிளிநொச்சி


தமிழ் தேசிய கூட்டமைப்பு 50 % மான ஆசனங்களை பெற்றுள்ளதுடன் பூநகரி பிரதேச சபையில் மாத்திரம் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு

தமிழ் தேசிய கூட்டமைப்பு 44 % மான ஆசனங்களை பெற்றுள்ளதுடன் எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

மன்னார்

இங்கு ஐ.தே.கட்சிக்கு 34% மான ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 % மான ஆசனங்களை பெற்றுள்ளது எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

வவுனியா


தமிழ் தேசிய கூட்டமைப்பு 28 % மான ஆசனங்களை பெற்றுள்ளதுடன் எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.


வடமாகாணத்தில்  ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த ஆசனங்கள் 



ஒட்டுமொத்தமாக வட மாகாணத்தை எடுத்து நோக்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 36% மான ஆசனங்களை பெற ஐ.தே.க, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி,டி,பி என்பன தலா 12% மான ஆசனங்களை பெற்றுள்ளார்கள் எஞ்சிய ஆசனங்களில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன முறையே 8%, 6% மான ஆசனங்களைபெற்றுள்ளார்கள்.


                                                                   கிழக்கு  மாகாணம் 

அம்பாறை

ஐக்கிய தேசிய கட்சிக்கு 26% மான ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன் பொதுஜன பெரமுனவிற்கு  25 % மான ஆசனங்களை பெற்றுள்ளது சிங்கள பிரதேசங்களில் பொதுஜன பெரமுனவிற்கு தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள அதே வேளை முல்லீம் தமிழ் பகுதிகளில் சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

மட்டக்களப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 % மான ஆசனங்களை பெற்றுள்ளதுடன் ஐ.தே.க,சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்பன 15% மான ஆசனங்களை பெற்றுள்ளார்கள். இங்கு   ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி தவிர  ஏனைய எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

திருகோணமலை

திருகோணமலையில் பொதுஜன பெரமுன 22% மான ஆசனங்களையும்  , ஐ.தே.க 17% மான ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 16% மான ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 14% மான ஆசனங்களையும்,முஸ்லீம் காங்கிரஸ் 12% மான ஆசனங்களையும் பெற்றுள்ளதுடன்  ஒரு சில சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட சபைகளில் பொதுஜன பெரமுனவிற்கு தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள அதே வேளை ஏனைய எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

கிழக்கு மாகாணத்தில்  ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த ஆசனங்கள் 



ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் ஐ.தே.கட்சி 21% மான ஆசனங்களையும் பொதுஜன பெரமுன 17% மான ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16% மான ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 14% மான ஆசனங்களையும், பெற்றுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களும் அவற்றின் சதவீதமும் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.



ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சில சபைகளில் போட்டியிட்ட காரணத்தால் அவற்றின் தனித்த ஆசனங்களின் எண்ணிக்கை வேறுபடும்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 25%  மான ஆசனங்களையும் ஐ.தே.கட்சி 16 % மான ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 11% மான ஆசனங்களையும் பொதுஜன பெரமுன 10 % மான ஆசனங்களையும் பெற்றுள்ள நிலையில் பெரும்பாலான  சபைகளில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையே காணப்படுகிறது.







No comments:

Post a Comment