Tuesday, April 3, 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..!




இலங்கையில் 2015 ஜனவரி 8 ஆரம்பிக்கப்பட்ட புதிய ஜனநாயகப் பாதை ஏறத்தாழ அதன் முடிவை நெருங்கியுள்ளது.   அப்போதைய சூழ்நிலையில் மகிந்தவின் ஆட்சிக்காலம் தொடர்பில் நான் 2014 டிசம்பரில் குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில்  பெருமளவு தமிழ்,முஸ்லீம் வாக்குகளுடன் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் ஏறத்தாள  40 மாதங்களாகியும் இந்த ஆட்சியின் மூலம் எதிர்பார்த்த பெரும்பாலான விடயங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், ஊழல்வாதிகள் எனக் கூறப்பட்ட நபர்களுக்கு எதிரான நிருபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் என எதிர்மறை தோற்றப்பாட்டினை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க   இறுதியாக இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிரணியின் பாரிய வெற்றி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதுவாக அமைந்துள்ளது.  

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட ஆகக்குறைந்தது 113 பேரின் ஆதரவு தேவையாகவுள்ள  சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க முன்வந்தால் வெறும் 107 பாராளுமன்ற உறுப்பினர்களை  மாத்திரம் கொண்ட ஐ.தே.கட்சியால் பிரதமரை காப்பாற்ற முடியாமல் போகும் இந்த  எண்ணிக்கையிலும்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 07, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 04, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 06  உறுப்பினர்களைக் கொண்டுள்ளது இந்நிலையில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி  ரணிலுக்கு அதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது முஸ்லீம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்னமும் தமது முடிவினை அறிவிக்கவில்லை இதே சமயம் ரணிலுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்கும் வசந்த சேனாநாயக்க, பாலித ரங்க பண்டார, ரத்ன தேரர் முதலியோரும் இந்த 107 பேரிலேயே  உள்ளடங்கியுள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறக்கூடிய நிலையிலேயே காணப்படுகிறது  இதே நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒருசில மகிந்த எதிர்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு உதவ முயன்றால் இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  முடிவு இதில் முக்கிய பங்கினை ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னை எதிர்க்கட்சி தலைமையாக  காட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கஆட்சியின் பட்ஜெட் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசுக்கு சார்பாகவே நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு வேளை இதிலும் அதனேயே கடைப்பிடிக்க முயன்றால் இது புலியும் யானையும் இணைந்த ஆட்சியாக காட்ட  சிங்கள இனவாதிகளுக்கு பாரிய வாய்ப்பாக அமையும் எனவே இந்த விடயத்தில் சம்மந்தன் எடுக்கப்போகும் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் ரணில் தலைமையிலான அரசுக்கு மக்களின் எதிர்ப்பு அதிகரிக்குமே ஒழிய குறையப்போவதில்லை  அடுத்த  ஜனாதிபதி தேர்தலின் மூலமாக  கோத்தபாயவை  தலைவராக கொண்டோ அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட  பாராளுமன்றத்தில் மகிந்தவை பிரதமராக கொண்டோ  அரசோ அமைவதை தற்போதைய சூழ்நிலையில் எவராலும் தடுக்க முடியாது.



No comments:

Post a Comment