Wednesday, April 25, 2018

திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி ஹபாயா பிரச்சனை




தற்போது திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பிரச்சனையை ஒத்த பிரச்சனை நான்கு வருடங்களுக்கு முன் திருகோணமலை  நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்திலும் ஏற்பட்டது. நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயின்ற  முஸ்லீம் மாணவிகள் திடிரென பர்தா அணிந்து பாடசாலைக்குள் வர   முற்பட்ட போது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடனடியாக 93 முஸ்லிம் பிள்ளைகளும் அருகாமையிலுள்ள அல்-பதா வித்தியாலயத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார்கள். இந்த இடத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் நேரடியாக வருகை தந்து கருத்து தெரிவித்தபோது. 


இலங்கையின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது. அந்தவகையில் பாடசாலைக்கு தமது கலாச்சார உடையுடன் வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அனால் இங்கு நடைமுறையில் சில எழுதப்படாத சட்டங்கள் காணப்படுகின்றன. பாடசாலை என்பது வெறும் அரச நிறுவனம் கிடையாது. அது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பு அந்த வகையில் தமது பாடசாலையின் காலச்சாரத்தை பேணுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. சில முஸ்லீம் பிரதேச பாடசாலைகளில் தமிழ் மாணவிகள் உடலை முழுவதுமாக மூடி கல்வி கற்பதை நான் எனது கண்ணால் கண்டுள்ளேன். எனவே பாடசாலை சமூகம் மறுக்கும் பட்சத்தில் பர்தாவுடன் எவரும் பாடசாலைக்கு வர முடியாது. அனால் இதற்கு மாற்றாக அவர்களை உடனடியாக அருகில் உள்ள முஸ்லீம் பாடசாலையில் இணைக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்.


தற்போது சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவமும் இதனை ஒத்தது தான். ஒரு காலத்தில் வேண்டுமானால் திருகோணமலை முஸ்லீம் மக்கள் நகர்புற பாடசாலைகளான சண்முகா இந்து மகளீர் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி,கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, புனித சூசையப்பர்  கல்லூரி முதலியவற்றை நம்பி இருக்க வேண்டிய நிலை காணப்பட்டது அனால் இன்று இவற்றுக்கு மாறாக சாஹிரா கல்லூரி  தரமான  கல்வியை வழங்கி வரும் நிலையில் எவரும் இந்த தமிழ் பாடசாலைகளை அண்டியிருக்கும் நிலையில் இல்லை.  இந்நிலையில் இப்பிரச்சினை இப்போது ஆசிரியரை அடிப்படையாக கொண்டு எழுந்துள்ளது. இதற்கு யார் இதில் வெல்வது என்பதை பார்க்காது உடனடியாக அந்த ஆசிரியர் இடமாற்றம் பெற்று வேறொரு முஸ்லீம் பாடசாலைக்கு செல்வதே இதற்கு தீர்வாக அமையும். இதனை விடுத்து வீணான இனவாத நடவடிக்கைகளை தமிழ் சமூகம் முன்னெடுப்பது இருக்கும் பிரச்சனைகளை மேலும் பெருப்பிப்பதாகவே அமையும்.

1 comment: