Sunday, June 21, 2015

இலங்கை அரசியலில் கண்ணுக்கு தெரியாத பேராபத்து




சில விடயங்கள் தமிழர்களின் அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியவை தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வந்து பின்னர் செல்வநாயகத்துடன் ஒப்பந்தமும் செய்து 1959 இல் பண்டாரநாயக்க கொலை செய்யப்படாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தமிழ் ஆயுத இயக்கங்களின் உருவாக்கத்தில்  பங்காற்றிய பாக்கிஸ்தானில் இருந்து பங்களதேஸ் எனும் நாடு பிரிய உதவிய இந்திரா காந்தி கொல்லப்படாது படாது இருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகள் எதுவாகவோ இருந்து விட்டு போகட்டும் அவை நடந்து முடிந்தவை. தற்காலத்துக்கு வருவோம் .

இரண்டு தசாப்தங்களாக எம்மை பாதித்த எதிரியாக விளங்கிய பயங்கரவாத புலிகள் அமைப்பினை நாட்டில் இருந்து முற்றாக துடைத்து எறிந்து இன்று நாம் சந்தோசமான வாழ்க்கையை வாழ உதவிய உத்தமர் இன்று எமக்கு தலைவராக இல்லை. தேசப்பற்று இல்லாத சிங்கள வாக்குகள் மூலமும் முற்று முழுதான முஸ்லீம் தமிழ் வாக்குகள் மூலமும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். நாட்டின் இயற்கை காடுகள் முஸ்லீம் குடியேற்றங்களாக மாறுகின்றன நாட்டின் பாதுகாப்புக்கு அரணான இராணுவ முகாங்கள் வடக்கில் மூடப்படுகின்றன புலம் பெயர் தமிழ் புலிகளுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன மத்திய வங்கிக்கு நாட்டின் பிரஜாவுரிமை இல்லாத தமிழன் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். எமக்கு உண்மையான சுதந்திரம் பெற்று தந்த உத்தமரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வராத படி கட்சி தலைவன் எனும் பதவியை வைத்து தடை ஏற்படுத்தப்படுகிறது இதற்கு தீர்வு ஒன்று தான் .


இவை எல்லாம் ஒரு சுத்த சிங்கள அடிப்படைவாத கருத்துக்கள் மனதில் நிறைந்த ஒருவன்  தன்னுடைய மனதில் கொண்டுள்ள கருத்துக்களாக  அமைய கூடியவை. இந்த கருத்துக்கும் முதல் பந்திக்கும் ஏற்படுத்தப்படும் இணைப்பு தான் அந்த பேராபத்து. 

No comments:

Post a Comment