Wednesday, June 24, 2015

ராபர்ட்டோ பிர்மினோ

உதைபந்தாட்ட உலகில் ஜூன் 24 இன்றைய தினம் முக்கியம் மிக்கதொரு தினம் தற்கால உலகின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் பிறந்த நாள் தான் அது. 2004 ம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் உலகின் புகழ் பெற்ற கழகமான பார்சிலோனா கழகத்துக்காக தன்னுடைய முதல் போட்டியில் பங்குபற்றிய மெஸ்ஸி அந்த அணிக்காக 300 க்கு மேற்பட்ட போட்டிகளிலும் தன்னுடைய நாடான அர்ஜெண்டினா அணிக்காக 100 போட்டிகளிலும் இதுவரை விளையாடி இருக்கிறார்.இன்றைய கால்பந்தாட்ட உலகில்  10 இலக்கத்துக்கு வரைவிலக்கணமே மெஸ்ஸிதான் என்றால் அது மிகையல்ல.




நான் இந்த பந்தியை எழுதுவதன் நோக்கம் இதுவல்ல இன்றைய தினம் கால்பந்து உலகில் இடம்பெற்ற லிவர்பூல் அணிக்காக ராபர்ட்டோ பிர்மினோ ஒப்பந்தம் செய்யப்பட்டமை. யார் இந்த ராபர்ட்டோ பிர்மினோ.  பிரேசில் மேசியோ நகரில் வீதிகளில் குடிநீர் போத்தல்களை விற்கும் ஒரு ஏழையின் மகனே இவர் தன்னுடைய 16 வயதில் வீட்டில் இருந்து சுமார் 2000 மைல்கள் தொலைவில் உள்ள சான்ரா கற்றரினா நகரில் உள்ள பிகுரியன்ஸ் கழக அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் தன்னுடைய திறமையின் மூலம் 2011 ம் ஆண்டு  ஜெர்மன் TSG 1899 Hoffenheim அணிக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைத்த போது “என்னுடைய குடும்பம் இனி ஒரு போதும் வேலை செய்யக்கூடாது” என சொல்லி இருந்தார் கடந்த இரு வருடங்களில் ஜெர்மன் புன்தாஸ் லீகா வின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிய இவருக்கு கடந்த வருட உலக கிண்ணத்தில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காமை துரதிஷ்டமே இருந்தும் புதிய பயிற்றுவிப்பாளர் டுங்காவின் கீழ் 2014 நவம்பர் பிரேசில் தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட இவர் ஆஸ்ரிய அணிக்கு எதிரான தன்னுடைய இரண்டாவது போட்டியிலேயே முக்கிய கோலை போட்டு அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து தன்னுடைய தெரிவினை நிருபித்தார் தொடர்ந்து தற்போது இடம்பெற்று வரும் கோபா அமெரிக்கா தொடரில் வெனிசுலா அணிக்கு எதிராக உத்தியோகபூர்வ தொடரில்  தன்னுடைய முதல் கோலை போட்டார். பிர்மினோவின் திறமை காரணமாக செல்சி, மான்செஸ்டர் யுனைட்டட் ஆகிய கழகங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய முயன்ற போதும் லிவர்பூல் அணி இறுதியில் தனதாக்கி கொண்டது லிவர்பூல் அணி சரித்திரத்தில் ஆகக் கூடிய தொகைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரராக இவர் தற்போது 29 மில்லியன் யுரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.



இந்தளவு தூரத்துக்கு இவரை பற்றி கூறுவதன் காரணம் இவர் கால்பந்தாட்ட உலகின் தற்போதைய ஜாம்பவான்கள் மேஸ்ஸி, கிறிஸ்டியானோ, நெய்மர் போன்று தனியே கோல்களை மட்டும் போடும் ஒரு வீரர் கிடையாது எவ்வளவு தூரம் கோல் போடும் முயற்சிகளை செய்கிறாரோ அதே போன்று  அவரது தடுப்பாட்டமும் சிறப்பாக காணப்படுகிறது அந்த வகையில் ஒரு முற்றுமுழுதான உதைபந்தாட்ட வீரனாக இவர் காணப்படுகின்றமையே  இவரிடம் என்னை கவர்ந்த விடயம். கீழே கடந்த இரண்டு பருவ காலங்களிலும் ஜெர்மன் புண்டஸ் லீகாவில் இவரது புள்ளிவிபரங்கள் காட்டப்பட்டுள்ளன 




Player Statistics

2013/14

2014/15

Ratings

7.94

7.79

Key Passes per Game

2.1

2.1

Tracles per Game

2.5

2.7

Dribbles per Game

4.5

4.2

 

No comments:

Post a Comment