Saturday, July 18, 2015

பாராளுமன்றத் தேர்தல்கள் 2015 யாழ்ப்பாணம், திருகோணமலை தேர்தல் மாவட்ட ஆசனங்கள் பற்றிய ஒரு புள்ளிவிபரவியல் கணிப்பீடு

நாட்டின் பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எம்முடைய தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கடந்த கால( அண்மைக்கால) தேர்தல்களின் அடிப்படையில் கட்சிகள் பெறக்கூடிய ஆசனங்கள் பற்றிய ஒரு புள்ளிவிபரவியல் கணிப்பீடே இதுவாகும்.இதில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டமும் கிழக்கு மாகணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக் கணிப்பு இவ்வருடம் ஜனவரிமாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2012 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தல் மற்றும் 2013 இல் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்

இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன மொத்தமாக 11 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள இம் மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபீடீபி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆகியன பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன.கடந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது மாவட்ட சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே 9 பாராளுமன்ற உறுப்பினர்களாக காணப்பட்ட ஒதுக்கீடு ஏழாக குறைவடைந்துள்ளது. 2013 ம் ஆண்டில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் பிரதான கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பெற்ற வாக்குகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
Division
TNA
UPFA
Kayts
8,917
4164
Vaddukkoddai
23,442
3763
Kankesanturai
19,596
4048
Manipay
28,210
3898
Kopay
26,467
4386
Udupiddy Polling Division
18,855
2425
Point Pedro
17,719
2953
Chavakachcheri 
22,922
4193
Nallur 
23,733
2651
Jaffna
16421
2416
Postal
7,625
1099
Kilinochi
36,323
7737
Postal
756
160
Total
250,986
43,893

இதன் அடிப்படையில் ஏறத்தாள மொத்த வாக்குகள் மொத்தமாக காணப்படக்கூடிய மூன்று இலட்சம் வாக்குகளில் சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இதே நேரம் இவ்வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வாக்காளர்கள் பெற்ற வாக்குகளை எடுத்து நோக்குவோமேயானால் அது பின்வருமாறு காணப்படுகிறது.

Polling Division
Electors
MR
MS
Postal

4607
10885
KAYTS
21,763
5,959
8,144
VADDUKKODDAI
46,416
7,791
20,873
KAN KESANTU RAI
62,371
5,705
18,729
MANIPAY
53,488
7,225
26,958
KOPAY
54,844
6,211
27,161
UDUPIDDY
38,945
3,937
18,137
POINT PEDRO
35,686
4,213
17,388
CHAVAKACHCHERI
50,494
5,599
23,520
NALLUR
45,248
5,405
24,929
JAFFNA
32,269
4,502
17,994
KILINOCHCHI
75,465
13300
38856
Total
516,989
74454
253574


தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் மாறாத நிலையில் சுமார் 25000 வாக்குகள் மேலதிகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளன.


இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த அதே எண்ணிக்கையிலான மக்கள் இத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் எனக் கொண்டால் மொத்த வாக்குகள் அண்ணளவாக 325000 ஆக அமையும் எனவே இதனை ஒரு ஆசனத்துக்கு பிரிக்கும் போது ( மொத்த ஆசனங்களில் ஒன்றை கழித்து வரும் தொகை) அது 54166 ஆக அமையும் இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபின் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் இம்முறை ஈபீடீபிக்கு கிடைக்கும் கடந்த முறை 75000 வாக்குகளை பெற உதவிய அரச சொத்துக்கள்,அரச ஊடகங்கள் ஆகியவற்றின் உதவி இம்முறை கிடைக்காத நிலையில் ஒரே ஒரு ஆசனத்தினை இம்முறை ஈபீடீபி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போனஸ் தவிர்ந்த மீதியுள்ள ஐந்து ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற முடியுமா என்றால் அது நிச்சயம் முடியாத ஒன்றாகும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடாத தமிழ் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத் தேர்தலில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக போட்டி இடுகிறது  இதனை விட கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபிடம் இருந்த அரச சொத்து ஊடக பலம் இம்முறை நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிட்டியுள்ளது எது எப்படி இருப்பினும் இந்நிலையில் இம்முறை பிரதான போட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் ஈபீடீபி ஒரு ஆசனத்தினை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 அல்லது மூன்று  ஆசனங்களை கைப்பற்ற மீதியுள்ள ஆசனங்கள்   தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கும் சில சமயம் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்ற முடியும். அந்த அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட ஆசான்கள் இவ்வாறு அமையும்.

கட்சி
ஆசனங்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
4 / 3
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
2 /1
ஈபீடீபி
1
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
1 / 0


திருகோணமலை  தேர்தல் மாவட்டம்
 திருகோணமலை  தேர்தல் மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு , நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்பன திருகோணமலையில்  பிரதான கட்சிகளாக போட்டியிடுகின்றன. இலங்கை பாராளுமன்ற தேர்தல்களில் ஒதுக்கப்படும் குறைவான ஆசனங்களான நான்கு ஆசனங்களையும் இந்த நான்கு கட்சிகளும் எவ்வாறு பங்கிட்டு கொள்ளும். என பார்ப்போம்.

2012 ல் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிதமிழ் தேசிய கூட்டமைப்பு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  விமல் வீரவம்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பன  போட்டியிட்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டன அந்த வகையில் இம்முறை விமல் வீரவம்சவின் கட்சியானது  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலும் முஸ்லீம் காங்கிரஸ்  நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியிலும் இடம்பெறுகிறதால் அந்த கட்சியின் வாக்குகளையும் சேர்த்து கட்சிகள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு காணப்படுகிறது. ஏறத்தாள 150000 வாக்காளர்கள் இதில் வாக்களித்து இருக்கிறார்கள்.


Division
TNA
UPFA,NFP
UNP,SLMC
Seruwila
5014
24,235
9538
Trincomalee
28,067
9,476
11621
Mutur
10,213
13,511
26935
Postal
1,102
5,634
2521
Total
44396
52856
50615

இதன்படி மூன்று கட்சிகளும் ஏறத்தாழ ஒரே அளவு வாக்குகளை பெற்றுள்ளன இதே நேரம் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளரும் பெற்ற வாக்குகள் பின்வருமாறு காணப்படுகின்றன.


Polling Division
Electors
MR
MS
Postal

6,207
8,327
SERUWILA
72,728
26,716
24,833
TRINCOMALEE
85,535
12,056
49,650
MUTUR
93,427
7132
57532
Total
251,690
52111
140342


மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்த கே.டி.எஸ். குணவர்த்தனவும் அனைத்து முஸ்லீம் கட்சிகளும் ஒன்றாக  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியமை காரணமாக அவரது வாக்கு அதிகரித்ததேயொழிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு வங்கிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை  எனிலும் சேருவல தொகுதியில் ஏறத்தாள 80000  வாக்குகள்  கே.டி.எஸ். குணவர்த்தன காரணமாக அதிகரித்துள்ளது. வாக்களித்த    மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 190000 என கொண்டால் ஒரு ஆசனத்துக்கு 63000 வாக்குகள் தேவை எனவே எந்த கட்சியும் இதனை பெற முடியாத நிலையில் சிங்கள முஸ்லீம் வாக்குகள் காரணமாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கே போனஸ் ஆசனத்தினை கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. அந்த வகையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு அமைய மாவட்ட ஆசன பட்டியல் இவ்வாறு காணப்படலாம் .

கட்சி
ஆசனங்கள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
2
தமிழ் தேசிய கூட்டமைப்பு
 1
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
1




No comments:

Post a Comment