Wednesday, February 18, 2015

புதிய களத்தடுப்பு விதிகளால் பல துடுப்பாட்ட சாதனைகளை நிகழ்த்தப்போகும் உலகக்கோப்பை 2015



2012 ஒக்டோபர் 30 ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கு பாரிய கொடையை வழங்கிய புதிய களத்தடுப்பு விதிகள் அமுலுக்கு வந்த நாள். அப்போதே இலங்கை அணித்தலைவர் மகேல இதனை  விமர்சித்து இருந்தார். இதனுடைய தாக்கம்  இன்று  நியூசிலாந்து சிறிய மைதானங்களில் உணரப்படுகிறது கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவிக்க விவேகம் தேவையில்லை வெறும் பலம் மட்டும் போதும் என்பதை தற்போதைய ஆட்டங்கள் நிருபிக்கின்றன.  T20 கிரிக்கெட் போட்டியிலேயே 5 களத்தடுப்பாளர்களுக்கு பேருக்கு 30M சுற்றுவட்டத்துக்கு வெளியே களத்தடுப்பு செய்ய முடியும் போது ஒரு நாள் போட்டியில் இவ்விதி மாற்றிஅமைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.  விளையாட்டில் பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் என இரு தரப்பினரில் இது ஒருவருக்கு மட்டுமே சாதகமாக அமைகிறது. அதிலும் முக்கியமாக சுழல்பந்துவீச்சாளர்கள் இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்படும் தரப்பினர்.

இந்த விதிகளின் காரணமாக அண்மையில் AB de வில்லியேர்ஸ் இனால் முறையடிக்கப்பட்ட அப்ரிடியின் சாதனை வெகு விரைவில்   மீளவும் முறையடிக்கபட தான் போகிறது. இதனை விட  இனி வரும் காலங்களில் அணிகள் 500 ஓட்டங்களை கூட இலகுவாக பெறமுடியும். இம்முறை உலகக்கோப்பை போட்டிகளை எடுத்து நோக்கினால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 4 அல்லது 5 விக்கெட்டுக்கள் குறைந்த ஓட்டத்துக்கு வீழ்த்தப் பட்ட நிலையில் பல அணிகள் 300 ஓட்டங்களை தாண்டி ஓட்டங்களை பெற்று வெற்றியும் பெற்றுள்ளன  பழைய விதி அமுலில்  இருந்திருந்தால் அந்தப்  போட்டிகளின் முடிவே மாறியிருக்கும்.  அண்மைக்காலமாக பிரகாசித்து வரும் தென்னாபிரிக்காவின் மில்லர், அவுஸ்திரேலியாவின் மக்ஸ்வெல், நியூசிலாந்தின் அண்டர்சன் போன்றவர்கள்  இம்முறை தங்கள் அணிகளுக்கு உலககிண்ணத்தை பெற்றுத்தரக்கூடிய வாய்ப்பினை இவ் விதிகள் வழங்கியுள்ளன. 

No comments:

Post a Comment