Wednesday, February 4, 2015

எண்ணங்களும் ஏக்கங்களும் : பி.கே, இலங்கை அரசியல் , உலக கிண்ணம்

பி.கே


இந்தி திரையுலக வரலாற்றில் அழிக்கப்பட முடியாத நபர் என்பதை மறுபடியும் ராஜ்குமார் கிரானி நிரூபித்துள்ளார். முன்னா பாய் MPBS இல் தொடங்கிய இவரது பயணம் த்ரீ இடியர்ஸ் ன் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மற்றுமொரு வெற்றியை பெற்றுள்ளது. நிச்சயம் இது தமிழில் சங்கரால் அல்லது இன்னுமொருவரால் வெளிவரும். கதை எளிதானது வேற்றுக்கிரகத்தில் இருந்து வரூம் அமீர்கான் தான் திரும்பி செல்ல முடியாமல்  இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையில் கலக்க முனையும் போது எதிர்நோக்கும் சவால்கள் அதிலும் முக்கியமாக மத நம்பிக்கைகள் மிக அற்புதமாக அனைத்தும் காட்டப்படுகிறது கதாநாயகி விராத்கோழியின் காதலி அனுஷ்கா சர்மா. படத்தின் முக்கிய கதாபாத்திரம் சஞ்சய் தத் இவர் மூலமாக இந்துமத சாமியார்களின் பித்தலாட்டங்களையும் காட்டியதன் மூலம் மத வெறியர்களின் எதிர்ப்பும் படத்துக்கு கிடைத்துள்ளது எது எப்பிடி இருப்பினும் இந்திய திரையுலகில் முக்கிய படங்களில் ஒன்றாக இது விளங்கும்.

இலங்கை அரசியல்  



ஏறத்தாள இன்னும் 100 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மைத்திரிபாலவின் அரசு மக்களை இயலுமானவரை கவர நடவடிக்கைளை எடுத்து வருகிறது ஆயினும் அடுத்த தேர்தலில் சுதத்திர கட்சி, ஐ.தே.க எப்படி போட்டி போட போகின்றன என்பதே தற்போது முக்கியமானது இதன் போது ஏற்படவுள்ள குழப்ப நிலையை மகிந்தவை தமக்கு சாதகமாக்க விமல்,வாசுதேவ,தினேஷ் காத்திருக்கிறார்கள் ஆயினும் தனது மகனின் எதிர்காலம் கருதி பெரும்பாலும் மகிந்த எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.




இன்னும் 72 மணித்தியாலங்களில் முதலமைச்சரின் பெயரை அறிவிப்பதாக ஹக்கீம் தெரிவித்து 72 மணித்தியாலம் ஆகப் போகிறது ஆயினும் எதுவும் நடந்த பாடில்லை மக்களின் தீர்ப்புக்கு பயந்து இறுதி நேரத்தில் மைத்திரி பக்கம் பல்டி அடித்த ஹக்கீம் மனசாட்சி படி தன்னால் உரிமை கொண்டாட முடியாத மாகாண சபை பற்றி முடிவெடுக்க தடுமாற்றத்தில் உள்ளார். தேர்தல் முடிவடைந்த பின்னர் கைக்கு வந்த முதலமைச்சர் பதவி மற்றும்  சகல மாகாண அமைச்சு பதவிகளையும் தம்முடைய சொந்த நலன்களுக்காக தூக்கி எறிந்து விட்டு தற்போது சற்றும் பொருந்தா  நியாயபாடுகளை முஸ்லீம் காங்கிரஸ் முன் வைக்கிறது.
அந்த நேரம் ஆட்சியை பொறுப்பெடுத்தால் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் உள்ள மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்குமாம்! பிறகு ஏன் மத்துகம, நோ-லிமிட் பிரச்சனை வந்தது. அந்த மக்கள் உங்களை நம்பினால் ஏன் ஊவாவில் படு தோல்வி அடைந்தீர்கள்?
கிழக்கு மாகாண இன அடிப்படையில் தாங்கள் பெரும்பான்மையாம் அதற்கு தமிழ் பேசும் இந்து,கிறிஸ்தவ மக்களை தனித்தனியாக புள்ளி விபரம் காட்டி இனம் அல்ல சமயமாம்.
பார்ப்போம் என்னும் எத்தனை காலம் உலகை  ஏமாற்ற முடியும்.

உலக கிண்ணம் 2015


1999 ம் ஆண்டுக்கு பின்னர் அரையிறுதிக்கு செல்ல முடியாத ஒரு அணியாக இந்த இலங்கை அணி காணப்படுகிறது. தரங்கவின் ஒதுக்கமும் ஜீவன் மெண்டிசின் சேர்ப்பும் பெரிய தாக்கத்தை அணியில் ஏற்படுத்தும். என்ன தான் இருப்பினும் அவுஸ்திரேலிய, நியுசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளில் ஒன்றே இப்போது கிண்ணத்துக்கான போட்டியில் முக்கியம் வகிக்கும் அணிகளாக காணப் படுகின்றன வழமை போலான தென்னாபிரிக்காவுக்கு துரதிஸ்டமும் இலங்கைக்கு அதிஷ்டமும் அமைந்தால் ஒழிய எதுவும் மாறப்போவதில்லை.

No comments:

Post a Comment