Saturday, September 10, 2011

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் ?

1999 உலக கிண்ணப்போட்டிகளுக்கு பின்னர் இலங்கை அணியில் செய்யப்பட்ட மாற்றங்களை ஒத்த நிலைமையை வேண்டி தற்போதைய இலங்கை அணி காணப்படுகிறது .2011 உலக கிண்ணப்போட்டிகளுக்கு பின்னரான இங்கிலாந்து,அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகள் இதனை எடுத்து காட்டுகிறது.   பந்துவீச்சில் சற்று  பலம்வாய்ந்த நிலையில் காணப்பட்டாலும் துடுப்பாட்ட வரிசை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.  தற்போதைய அணியில் விளையாடும் குமார் சங்ககரா,மகேல ஜெயவர்த்தனா , டில்ஷான்,சமரவீர ஆகியோர் 35 வயதை நெருங்கிக் கொண்டுள்ளார்கள்.எனவே 2015   உலக கிண்ணப்போட்டிகளின் போது இவர்களில் எவரும் விளையாடப் போவதில்லை.இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.முதலில் அணியை அடுத்த உலக கிண்ணப் போட்டிகளுக்கு தலைமை தாங்க கூடிய விதத்தில் அணித்தலைவர் தெரிவு அவசியம்.2003 உலகக்கோப்பை போட்டிகளையடுத்து தென்னாப்பிரிக்கா அணி மேற்கொண்ட மாற்றம் இதற்கு சிறந்த எடுத்து காட்டாகும்.அப்போதைய அணியில் பல அனுபவசாலிகள் இருந்த போதிலும் தென்னாப்பிரிக்காஇளம் வீரரான கிரகாம் ஸ்மித் ற்கு அணித்தலைவர் வாய்ப்பினை அளித்திருந்தது. இதனை முன் மாதிரியாகக் கொண்டு இலங்கை இளம் வீரர் ஒருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும்.மேலும்  ஏற்கனவே அணிக்கு அழைக்கப்பட்ட தினேஷ் சந்திமால் ,திமுத் கருணாரத்ன ,லகிரு திருமான்னேஆகியோருக்கு தொடர்ச்சியானசந்தர்பம் அளிக்கப்பட வேண்டும்.இதனை விட உள்ளூர், A தர போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய   வீரர்களான பாணுக ராஜபக்ச,அஞ்சேலோ பெரேரா,ரோஷன் சில்வா முதலியோரையும் தேர்வு குழு கருத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கத்தவறினால் இலங்கையின் எதிர்காலம் கவலைக்கிடமான நிலைக்கு செல்வதனை எவராலும் தடுக்க முடியாது.


No comments:

Post a Comment