Saturday, October 29, 2011

தீபாவளி தமிழ்ப் படங்கள் ஒரு குறுகிய பார்வை

வேலாயுதம்
 காவலன் படத்தின்வெற்றியை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விஜய் நடித்துள்ள திரைப்படம் வேலாயுதம். ஏறத்தாழ நாற்பத்தைந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ராஜா இயக்கியுள்ளார் .இது தெலுங்குபடமான அசாத்தை முற்று முழுதாக தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் முதல் பாதி ரசிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது . நகைச்சுவை காட்சிகள் நிச்சயமாக அனைத்து ரசிகர்களையும் கவர்த்திருக்கும். இடைவேளையை தொடர்ந்து படம் சாதரணமான விஜய் படமாக நகர்வது சலிப்பையே ஏற்படுத்துகிறது.முதல் பாதியில் படம் சென்ற வேகத்தில் தொய்வு ஏற்படுகிறது.படத்தின் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் வேட்டைகாரனுடன் ஒப்பிட முடியவில்லை.எனிலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது வேலாயுதம் விஜய் ரசிகர்களின் பங்களிப்புடன் முதலுக்கு மோசம் செய்யாது வெற்றி பெறும் என நம்பலாம். 

 7 ஆம் அறிவு
 
கஜனியை அடுத்து சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் முருகதாஸ் இயக்கம் தமிழ் படம் என்ற வகையில்  படத்துக்கு மிகுந்த எதிர்பார்த்து நிலவியது .ஏறத்தாழ சுமார் 84 கோடி செலவில் எடுக்கப்பட்டஇந்த திரைப்படம் பாதி வரலாற்று படமாகவும் மீதி ஜனரஞ்சகமான முறையிலும் எடுக்கப்பட்டுள்ளது இருப்பினும் .இவற்றின் கலவை சரியான முறையில் அமைய வில்லை.பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த பாடல்களை நினைவூட்டுகிறது. எவ்வளவு சிறந்த கதை கருவை படம் கொண்டிருப்பினும் அதன் எதிர்பார்த்த வசூல் கிட்டுமா என்பது சந்தேகமே.

No comments:

Post a Comment