தீபாவளிக்கு வெளிவந்த
விஜயின் வெடி மசாலா வேலாயுதம், தமிழன் தமிழன் என்று குரைத்த சூரியாவின் ஏழாம் அறிவு ஆகிய
கமர்சியல் படங்களுடன் போட்டி போடாமல் தப்பி பிழைத்து சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு
எமது
தமிழ் சினிமாவிலும் சாதாரணமான
கதையை கொண்டு தரமான படத்தினை தரத்தக்க இயக்குனர்கள் இன்னமும் உள்ளார்கள் என்பதை
நிருபிக்கும் விதமாக வந்துள்ள படமே மயக்கம் என்ன. சிறந்த புகைப்படக்கலை நிபுணராக
வரவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழும் தனுஷ் அதனை அடையும் வரை எதிர்கொண்ட
நிகழ்ச்சிகளை காதல், நட்பு, துரோகம் உள்ளடக்களாக கொண்டு செல்வராகவனின் கைவண்ணம் பளிச்சிடும்
படமாக இது வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்துக்கு
மேலும் வலு சேர்க்கின்றது. பிற சினிமாக்களின் தழுவல்கலாக தமிழ் படங்கள் வரும்போது சர்வதேசரீதியில் அவற்றினை பார்க்கும்போது எமது தனித்துவம் வெளிவராது என்ற தனது கூற்றுக்கு பலம் சேர்க்கத் தக்கதாக ஒரு சிறந்த படைப்பினை செல்வராகவன் தந்துள்ளார்.ஆடுகளம் படத்துக்கு பிறகு
தமிழ் சினிமாவை தேசிய விருதினை நோக்கி மீண்டும் பயணிக்கவைக்கக்கூடிய தகுதியினை இந்த
படம் தந்துள்ளது.
உண்மையில் மயங்கித் திணறடித்திருக்கிறது...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்