Friday, December 23, 2011

2011 இலங்கை அரசியலில் விட்டுசென்ற நான்கு கேள்விகள்


இன்னும் ஒரு வாரத்தில் 2011 விடைபெறப்போகின்றது.இந்த தருணத்தில் இந்த வருடம் எமக்கு விட்டுச்சென்றுள்ள நான்கு கேள்விகளை இங்கு சுருக்கமாக தந்துள்ளேன்.

அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடருமா ?




பேச்சுவார்த்தை என்னும் பெயரில் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திய நாடகம் 17 சுற்றுக்கு பின்பு ஏறத்தாள முடிவுக்கு வந்துள்ளது. காணி,பொலிஸ்ஆகிய முக்கிய அதிகாரங்களை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணம் என கூறப்படும் போதும் இவ்வளவு நாட்களிலும் இடம்பெற்ற பேச்சுக்களில் ஏன் இந்த நிலை ஆராயப்படவில்லை என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஜனாதிபதி இப்போது கூறியதை முதலிலேயே கூறி இந்த அர்த்தமில்லாத பேச்சினை தவிர்த்திருக்கலாம். எனிலும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையினை சமாளிக்கவும் அரசுக்கு இது தேவைப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அரசின் அடுத்த நாடகமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைபினை கொண்டு வருவதற்கு இது அடுத்த வருடமும் தொடரக்கூடிய நிலையே காணப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவு?



ஐ.நா நிபுணர் குழு, சனல் 4 என்பவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் இது தொடர்பான வாதங்கள் பல்வேறு தரப்பாலும் முன் வைக்கப்பட்டுள்ளன அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைத்த மேற்குலக நாடுகள் இதன் உண்மைதன்மையில் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் பொதுநலவாய நாடுகள் இதனை வரவேற்றுள்ளன. இறுதியாக இன்று நிபுணர் குழு அறிக்கையைவிட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆதாரம் கூடியது என கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ள அதேநேரம்இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட சிவிலியன் பாதிப்புகள், சிவிலியன் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் தவறுகளைக் குற்றஞ்சாட்டாது நல்லிணக்க ஆணைக்குழு நழுவியுள்ளதாக . இந்து பத்திரிகை விமர்சித்துள்ளது மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட சில தமிழ் கட்சிகள் இதனை நிராகரித்து சர்வதேச விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுதியுள்ளது. எனவே இதன் விளைவினையும் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்

சரத் பொன்சேகாவின் விடுதலை?



வெள்ளைக் கொடி வழக்கில் 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றதினால் தீர்ப்பளிக்கப்பட்ட .சரத்பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக பலதரப்பட்ட கருத்துகள் தற்போது நிலவுகின்றன.விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மூலகாரணம் என நம்பப்படும் இவரை முன்னாள் இராணுவத் தளபதி என அழைக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பான மீள எழுதப்பட்டுள்ள வரலாற்றில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மன்னிப்புக்கென ஏதாவது தரப்பு முன்வைக்கும் யோசனையை தான் எதிர்க்கப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ள அதே வேளை பொன்சேகாவின் குடும்பத்தினர் அதுதொடர்பாக என்னுடன் கலந்து ஆலோசித்தால் அவரை விடுதலை செய்வது குறித்து என்னால் சிந்திக்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார் எனவே அடுத்த வருடம் இது தொடர்பான முடிவினை எதிர் பார்க்க முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம்?




நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியில் நிலவிய சூறாவளி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது புதிய தலைவராக ரணில் விக்ரமசிங்க அதிகூடிய வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தலின் பின்னர் செய்தியாளர் மத்தியில் உரையாற்றிய கரு ஜெயசூரிய தாம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமையவே தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் பிரதித் தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சஜித் பிரே மதாச தாம் பொதுமக்களின் விருப்பத்திற்கு தலை வணங்குவதாகவும் புரட்சிகரமான பயணம் ஒன்றிற்கே தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கசெயற்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, தவறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எனவே அடுத்த வருடம் ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம்.







1 comment:

  1. சகோ அரசியலில் எனக்கு அர்வமே வந்ததில்லை அதிலும் இலங்கை இந்திய அரசியல் என்றால் திரும்பியே பார்ப்பதில்லை..

    மன்னிக்கணும்..

    ReplyDelete