இன்னும் சற்று நேரத்தில் உலகக்கிண்ணத்தின்
மூன்றாம்,நான்காம் காலிறுதி போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே இடம்பெற்ற
காலிறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதலாவது அரையிறுதியில் பிரேசில்
அணி ஜெர்மனியை எதிர்கொள்ளவுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற கொலம்பியாவுடனான தீர்க்கமான
காலிறுதியில் வென்றபோதும் அணியின் முக்கிய தூணான நெய்மர், அணித்தலைவர் தியகோ சில்வா
ஆகியோர் இல்லாத நிலையில் பலம் பொருந்திய ஜெர்மனி அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய காயம் நெய்மரை உலகக்கிண்ணத்தில் இருந்து முற்றிலுமாக
வெளியேற்றிவிட்டது. அரையிறுதியில் வென்றால் தியகோ சில்வா இறுதிப் போட்டியில்
விளையாட முடியும் என்றாலும் அதற்க்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.
அணியில் இந்த இரு வீரர்களின் இடம் எவராலும் நிரப்பமுடியாத முக்கியமான
இடங்களாகும். முன்கள அதிரடி ஆட்டத்தில் நெய்மர் மட்டுமே பிரேசில் சார்பாக
பிரகாசித்த ஒரே வீரராவார். சில ஆட்டங்களில் ஹல்க் சிறப்பாக செயற்பட்டாலும் அவரால்
ஒரு கோளை கூட போட முடியவில்லை. இந்நிலையில் மூன்று உலக கிண்ண அறையிறுதிகளை
சந்தித்த பயிற்சியாளர் சொலாரி இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறார். நெய்மரின்
இடத்தில் விளையாடக்கூடிய லிவர்பூலின் கொண்டினோ, ஹோம்பஹம் அணியின் ராபர்டோ பிரினமோ முதலியவர்களை
தெரிவு செய்யாமை இவரது பெரிய தவறாக அமையப்போகிறது. இவரிடம் உள்ள தெரிவுகளான
வில்லியமோ பெர்னார்ட்டோ நெயமரை ஆட்டத்தில்
நெருங்கக்கூட முடியாதவர்கள். முன்கள வீரர் பிரெட்டின் தொடர்ச்சியான மோசமான ஆட்டம் அணிக்கு
மேலும் ஒரு சிக்கலாகும்.
முன்கள நிலை இப்படி இருக்க அணித்தலைவர் தியகோ
சில்வாவின் இடத்தை நிரப்பக்கூடிய ஒரே தெரிவாக டன்ரி காணப்படுகிறார். ஜேர்மன்
அணியின் பாதிப்பேர் இவரது கழகமான வெயர்ன் முனிச்சில் விளையாடுபவர்கள் எனவே
இவரது பலம்,பலவீனம் போன்றவற்றை நன்கு அறிந்த இவர்களுக்கு இவரை தாண்டி கோல் போடுவது
சிரமமாக இருக்கப்போவதில்லை.
No comments:
Post a Comment