Monday, June 16, 2014

இலங்கையில் முஸ்லீம் அரசியலின் மாறா போக்கின் பின்னணியும் ஒரு கேள்வியும்


மீண்டும் ஒருமுறை இலங்கையில் முஸ்லீம் சமூகம் மீதான சிங்கள பேரினவாத சமூகத்தின் தாக்குதல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் முஸ்லீம் சமூக அரசியல் வாதிகள் மீது பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன் சில யதார்த்தங்களை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தமிழர்களை விட சிங்களவர்களுடன் தான் அதிகம் அண்டி வாழ்கிறார்கள்.

முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்களுடைய பிரதான ஜீவனோபாய தொழிலாக இருப்பது வியாபாரம் எனவே இலங்கை போன்ற ஒரு சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அவர்களை பகைத்து எதுவும் செய்து விட முடியாது தம்முடைய வணிக நோக்கங்களுக்கு சிங்களவர்களை அரவணைத்து செயற்படுவது முக்கியம்.


தமிழர்களுக்கு புலம்பெர்ந்த நாடுகளில் உள்ளது போன்று பொருளாதார ரீதியான அல்லது உறவு ரீதியான பலம் முஸ்லீம்களுக்கு இல்லை.
(உலகில் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் இருந்தும் அவற்றால் இலங்கையில் எதுவும் செய்துவிட முடியாது.)




இவற்றைவிட முஸ்லீம் பிரதேசங்களின்,மக்களின் அபிவிருத்தி.அரசாங்கத்துக்கு சார்பாக நடப்பதன் காரணமாகவே வடக்கு,கிழக்கில் இன்று தமிழ் பிரதேசங்களை விட முஸ்லீம் பிரதேசங்களின் அபிவிருத்தியின் முக்கிய காரணம்.







கடந்த காலங்களிலும் கிறிஸ் மனிதன் முதலிய பிரச்சினைகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக எழத்தான் செய்தன. அதன் போதும் ஒரு பகுதி அரசு பக்கமும் மறுப குதி எதிராகவும் நின்று தேர்தலில் போட்டியிட்ட இரு தரப்பும் தேர்தலின் பின் அரசுடன் இணைந்து கொண்டன அதன் பின்னர் கூட பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள்  ஏற்பட்டன  அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தபோது முஸ்லீம் காங்கிரஸ் அளித்த பதில் தாம் விலகினால் கூட அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவே அது முட்டாள்தனம் என்பது.


அவர்களால் மத்திய ஆட்சியில்  எதுவும் செய்ய முடியாது போயினும்  முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவுடன் இயங்கும்  கிழக்கு மாகாண சபையில் ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி இப்போது தம்முடைய கட்சிக்கு முதலமைச்சர் பதவி தரப்படவேண்டும் என கேட்கிறார்கள் எனவே இத்தகைய சூழலில் ஆவது கிழக்கில் அரசினை விட்டு வெளியேறி அரசினை எதிர்த்து அந்த முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அவர்கள் பெறலாம் செய்வார்களா?


No comments:

Post a Comment