Wednesday, June 11, 2014

FIFA உலக கிண்ணம் 2014 - வெல்லுமா பிரேசில் அணி?

2013 CONFEDERATIONS CUP CHAMPIONS
இன்றைய  ஒரு இரவின் பின்னர் உலக கிண்ணப் போட்டிகள் பிரேசிலில் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில் உலக கிண்ணத்தை கைப்பற்றும் என பலரால் எதிர்பார்க்கப்படும் பிரேசில் அணியின் நிலை பற்றி சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

h
2008 ஐரோப்பிய கிண்ண வெற்றியுடன் பங்கேற்று ஸ்பெயின் அணி 2010 உலக கிண்ணத்தை வென்றது

 2006 உலகக்கோப்பையைக்கு முன் விளையாடிய கடைசி 15 போட்டிகளில் தோல்வியடையாத அணியாகபங்கேற்று  இத்தாலி அணி கைப்பற்றியது.

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வாறு பார்க்கப்படுகிறதோஅதை விட வெறித்தனமாக பிரேசில் மக்கள் உதைபந்தாட்டத்தை வெறித்தனமாக நோக்குகிறார்கள். இதுவரை இடம்பெற்ற 20 உலக கிண்ணப் போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே அணி என்ற வகையிலும் 10 அரையிறுதிப் போட்டிகள் உட்பட 5 கிண்ணங்களை கைப்பற்றிய அணி என்ற வகையிலும் உலக கிண்ண போட்டிகளில் பிரேசிலுக்கு முக்கிய இடம் உண்டு.


தியாகோ சில்வா 
SCOLARI
பிரேசில் நாட்டை சேர்ந்த பல்வேறு வீரர்கள் தேசிய அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஏனைய நாட்டு அணிகளில் விளையாடுகிறார்கள். இறுதியாக கூட  பிரேசிலின் முன்கள வீரர் DIEGO COSTA நடப்பு சம்பியன் ஸ்பெயின் அணியில் இணைந்து கொண்டார்.

நெய்மர்

இம்முறை போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் தகுதிகாண் போட்டிகள் எதிலும் பங்குபற்றாத நிலையில் போட்டியில் நுழைகிறது. ஏற்கனவே 2002 இல் உலக கிண்ணத்தை பிரேசிலுக்கு பெற்றுக்கொடுத்த பயிற்சியாளர் SCOLARI  இம்முறையும் அணியை வழிநடாத்துகிறார். உலகின் தலை சிறந்த பின்கள வீரர் தியாகோ சில்வா அணிக்கு தலைமை தாங்குகிறார். பார்சிலோனா அணியின் இளம் முன்கள வீரர் நெய்மர் பிரேசிலின் மிகப்பெரிய தூணாக விளங்குகிறார்.

பிரேசிலின் முக்கிய பலமாக

·         கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் 14 போட்டிகளில் வென்றமை.
·         2013 confederations cup ஐ கைப்பற்றிய அணியின் அதே வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியுடன் இம்முறை பங்கேற்கின்றமை.
·         தற்போதைய அணிகளில் உலகிலேயே தலைசிறந்த பின்கள வரிசையை கொண்டுள்ளமை.
         2002 ம் ஆண்டுக்கு பின்னர் சொந்த நாட்டில் தோல்வியையே சந்திக்காமை.
 என்பன விளங்குகின்றன.

அதே நேரம் கிண்ணத்தை பெறுவதில் பிரேசில் அணியின் பாதகங்களாக
  • அணியின் மிக முக்கிய இடங்களாக விளங்கும் கோல்காப்பாளர், பிரதான முன்களவீரர் ஆகிய இடங்களில் செயற்படும் JULIO CESAR, FRED ஆகியோர் CONFEDERATIONS CUP போட்டியை தொடர்ந்து தம்முடைய கழக மட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்காமை.
  • மத்தியகள வீரர்களான oscar,PAULINHO ஆகியோர் அண்மைய காலங்களில் எதிர்கொண்ட காயங்கள் காரணமாக பழைய நிலைக்கு திரும்பாமை.


ஆகியவற்றை குறிப்பிடலாம்.
Fred and julio cesar with Thiago silva

oscar and paulinho

2013 CONFEDERATIONS CUP இல் உலக சாம்பியன்களான ஸ்பெயின்,இத்தாலி,உருகுவே என்பவற்றை வென்று கிண்ணத்தை கைப்பற்றியமை பிரேசிலுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாகும் இருந்த போதும்   1997,2005,2009 ஆகிய CONFEDERATIONS CUP களை பிரேசில் கைப்பற்றிய போதும் அதற்கு அடுத்த வருடம் இடம்பெற்ற உலகக்கிண்ணங்களை அவர்கள் வெல்ல வில்லை.


இவ்வாறான நிலையில் பொருளாத ரீதிலில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிநோக்கியுள்ள பிரேசில் பல பில்லியன் நிதியினை செலவழித்து மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இப்போட்டியை நடத்துகின்றது. கிண்ணத்தை கைப்பற்றுவது ஒன்றே இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரேசில் அணி வழங்கக்கூடிய சிறந்த பதிலாக இருக்கும்.

No comments:

Post a Comment