டெல்லி தேர்தல் முடிவு என்று வெளியானதோ அன்று தொடங்கிய ஆம் ஆத்மி என்ற அலை இன்று இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரை வந்துள்ளது. ஏறத்தாள 20 மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மிக்கு எதிரான விமர்சனங்களும் முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது.
முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சொகுசு இல்லம், கட்சியின் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அதி நவீன சொகுசு என்பவற்றில் ஆரம்பித்த விமர்சனம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மேலும் பல கோணங்களில் எதிரொளிக்கவுள்ளது
அதிலும் டெல்லியில் எந்த ஆட்சியின் ஊழலை விமர்சித்து ஆட்சிக்கு வந்தார்களோ அதே காங்கிரஸ் ஆதரவுடன் அமைத்த ஆட்சி கட்சிக்கு நிச்சயம் பின்னடைவையே ஏற்படுத்தும்.
ஒட்டு மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும்வரையிலான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி இந்திய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கப் போகிறது.
No comments:
Post a Comment