Saturday, May 25, 2013

UEFA CHAMPION LEAUGE ஒரு அறிமுகம்

இன்றைய தினம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் இவ்வருடத்தின் UEFA CHAMPION LEAUGE இறுதிப் போட்டி இடம்பெறவுள்ள நேரத்தில் இது பற்றிய சிறு அறிமுகத்தினை வழங்கலாம் என்று இதனை எழுதுகிறேன்.
 என்ன தான் உதைபந்தாட்டம் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விளையாட்டாக காணப்படுகின்ற போதும் இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இதற்கான ரசிகர்களும் ஆர்வமும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. ஊடகங்களும் இதற்கான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை. இலங்கையில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஊடகங்கள் இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக பிரசுரித்து வந்ததன் விளைவாகவே  இலங்கையில் கிரிக்கெட் பிரபல்யமான விளையாட்டாக மாறியமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச சிநேகபூர்வ போட்டிகள், நாடுகளுக்கு இடையில் கிண்ணத்துக்கான போட்டிகள்  குறைந்தளவு விளையாடப்படுகின்றமை காரணமாக இலங்கையில் ஊடகங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. எனிலும்  கிரிக்கெட் ஒட்டுமொத்த விளையாட்டையும் ஆக்கிரமித்துக்த கொண்டமையே இதன் பிரதான காரணம். தமிழ் பதிவர்களில் கூட ஓரிரண்டு பேர் அதுவும் உலகக் கிண்ணம், ஐரோப்பிய கிண்ணம் போன்ற போட்டிகளின் போது மட்டுமே அவர்களுடைய  ஏதாவது பதிவை பார்க்க முடியும்.
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம்(FIFA) கழக மட்ட போட்டிகளுக்கு முக்கியத்துவமளித்தே தம்முடைய நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது. வருடத்தின் சில நாட்கள் மட்டுமே சிநேகபூர்வ, கிண்ணப் போட்டிகளுக்கு உரிய நாளாக விளங்குகிறது. ஏனைய நாட்களில் பல நாடுகளில் அவர்களது கழக மட்ட போட்டிகள் இடம்பெறும். இதனை எல்லோருக்கும் தெரிந்த கிரிக்கேட் IPL ஐ கொண்டு விளக்குவது இலகு. இந்தியாவின் IPL அதன் பின்னர் இடம்பெறும் CHAMPION LEAUGE போன்று ஐரோப்பாவில் பல தரப்பட்ட நாடுகளில் இவ்வகை லீக் போட்டிகள் இடம்பெற்று அவற்றில் முன்னிலை பெறும் நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டியே இந்த UEFA CHAMPION LEAUGE.
1955 இல் இது  உருவாக்கப்பட்டாலும் 1992 முதல் தற்போதய வடிவத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் பலவித தெரிவு போட்டிகள்,PLAY OFF சுற்றுகள் என்பன கடந்து இறுதியாக 32 நாடுகள் GROUP STAGE  என்னும் பிரிவில் இடம்பெறும் இதற்கான தெரிவு வருடாவருடம் ஒரு சில மாற்றத்துக்கு உட்படலாம். இது   நாடுகளின் லீக் போட்டிகளுக்கான ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின்  வரிசைப் படுத்தலில் தங்கியுள்ளது எனிலும் குறைந்த பட்சம் இதில் பிரதான நாடுகளின் அணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு காணப்படலாம்.
ENGLISH PREMIER LEAUGE - 3- 4அணிகள்
 SPAIN LA LIGA             - 3- 4 அணிகள்
ITALY SERIE A             - 3- 4 அணிகள்
GERMANY BUNDESLIGA    - 3- 4 அணிகள்
FRANCE LEAGUE           - 2- 3 அணிகள்
DUTCH EREDIVISIE         - 2-3 அணிகள்
PORTUGUESE LIGA         - 2- 3 அணிகள்
இதனை விட ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அணிகளும் உள்ளடங்கலாக 32 நாடுகள் 32 நாடுகள் GROUP STAGE  இல் விளையாட தகுதி பெறும் இவை 8 GROUP களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அடுத்த KNOCKOUT சுற்றில் விளையாட தகுதி பெறும் பின்னர் தொடர்ந்து வரும்  KNOCKOUT சுற்றுகள் மூலம் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி தவிர ஏனைய அனைத்து சுற்றுக்களிலும் போட்டியிடும் அணிகள் தமது சொந்த மைதானத்திலும் எதிர்அணியின் மைதானத்திலும் மோதுவதுடன் அவர்களுக்கு இடையிலான  வெற்றி  இரு மைதானங்களிலும் பெற்ற மொத்தக் கோல்களின் எண்ணிக்கை அது சமமாயின்  எதிரணி மைதானத்தில் கூடிய கோல் பெற்ற என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் இவ்வருடம் இறுதிப் போட்டியில் இரு ஜேர்மன் நாட்டு அணிகள் மோதுகின்றன.
நேரம் போதமை காரணமாக GROUP STAGE அணிகளின்  தெரிவு KNOCKOUT அணி சுற்று தெரிவு ஒவ்வொரு நாட்டின் லீக் மற்றும் அதில் விளையாடும் அணிகள் அவற்றின் வீரர்கள் பற்றிய விடயங்களை இதில் உள்ளடக்க முடியவில்லை அவற்றை முடிந்தால் இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment