Thursday, January 15, 2015

த இன்டர்வியூ + ஐ இரண்டு மொக்கை படங்கள் எனது பார்வையில்

த இன்டர்வியூ


கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட படம். ஐநா வரையில் இப்படம் தொடர்பாக விமர்சிக்கப்பட்டமை, அமெரிக்காவின் ஏகாபத்தியத்துக்கு எதிரான  வடகொரியாவின்  அரசியல் போன்றவற்றால் இப்படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன்.






வடகொரியாவில் அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்தலாம் என எதிர்பார்க்கப்படும் ஏவுகணை பரீட்சிக்கப்படுகின்றது. நவீன உலகின் ஹிட்லராக வடகொரிய அதிபர் கிம் யோங் யுன் வடகொரியாவினை ஆட்சி செய்கிறார். அமெரிக்காவில் Dave Skylark என்பவரால் Skylark Tonight என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்படுகிறது  இதில் பிரபல்யங்கள் தொடர்பான அவர்களில் வாழ்க்கை கிசுகிசுக்களையும்மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது  இது 1000 அத்தியாயங்களை கடந்து மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கும் இது  வடகொரிய அதிபர் கிம் யோங் யுன் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்பது தெரிய வருகிறது. இதையடுத்து அவரை இந்நிகழ்ச்சிக்காக பேட்டி கான்பதன் மூலம் கொலை செய்ய அமெரிக்கா உளவு பிரிவு திட்டமிட்டு அதற்கென Dave Skylark ஐயும் நிகழ்ச்சி தயாரிப்பாளரையும் அங்கு அனுப்புகிறார்கள் அங்கு அவர்கள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார்களா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து தரும் படமே இது.


படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் நிறுவன  இணையம் வடகொரிய ஹக்கர்களால் கட்டுப்படுத்தப்பட்டமை, வெளியிட முன்வந்த திரையரங்குகள் மிரட்டப்பட்டமை அமெரிக்க ஜனாதிபதியே  படத்தை வெளியிட தூண்டியமை என பல சர்ச்சைகளை உருவாக்கியமை காரணமாக online இல் வெளியிடப்பட்ட எல்லா படங்களின் வசூலையும் இப்படம் முறியடித்தது. இருப்பினும் படம் சராசரி படமே பல இடங்களில் படத்தில் ஜதார்த்தம் இடிக்கிறது அரசியல் மாத்திரம் இல்லாவிட்டால் இது நிச்சயம் மொக்கை படமாக போயிருக்கும்.








சங்கரின் மற்றுமொரு பிரமாண்டமான தயாரிப்பு. எந்திரனுக்கு பிறகு இவ்வளவு காலம் காத்திருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கொஞ்சம் கூட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பாய்ஸ் தான் ஷங்கரின் ஒரே ஒரு தோல்விப்படமாக கூறப்பட்டாலும் என்னை பொறுத்த வரை இதுதான் ஷங்கரின் முதல் தோல்வி. முதலில் இந்த கதைக்கு எதற்கு  மூன்று மணித்தியாலங்கள்? சியான் விக்ரமின் நடிப்பு, சங்கரின் பிரமாண்டம்  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பன ஏற்கனவே நிருபிக்கப்பட்ட விடயங்கள். எனவே எந்த ஒரு ரசிகனுக்கும் இதனை தாண்டி சங்கரில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.


படத்தில் கதை என்று  சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஐ என்பது இன்ப்ளுவன்சா வைரசாம் வில்லன்களால் விக்ரமின் உடலில் இது செலுத்தப்பட  உடல் விகாரமடைந்து அலங்கோலமான தோற்றத்தை அடைகிறது இதற்காக  வில்லன்களின் உடலையும்  இதை விட கூடுதலாக  விக்ரம் பழி வாங்குகிறார் அவ்வளவுதான். இடையில் எமி ஜாக்சன் கவர்ச்சி காட்டி சென்டிமெண்ட் டயலாக் அடிக்கிறார் . ரகுமானின் சரக்கு முழுவதும் தீர்ந்து விட்டதா என்ற கேள்வியை இசை எழுப்பியுள்ளது ஒரு பாடலும் கவரவில்லை பேசாமல் தமிழ் படத்தை விட்டுவிட்டு ஹொலிவூட் செல்வது நல்லது

 படத்தின்  முதல் பாதி மாத்திரம் பரவாயில்லை. மற்றும்படி  விக்ரமுக்கு வேண்டுமானால் ஒரு பிலிம் பெயாரோ தேசிய விருதோ கிடைக்கலாம். சங்கர் பேசாமல் சமூக மெசஜ் சொல்லும் படங்கள் எடுப்பதே சிறந்தது. இந்த பொங்கலில் எனக்கு பெரிய ஏமாற்றம் இது. இன்னும் இதை தியேட்டரில் பார்க்காதவர்கள் நல்ல பிரிண்ட் வரும் வரை பொறுத்திருந்து வீட்டில் பார்க்கலாம். இல்லை என்றாலும் ஏப்ரல் புதுவருடம் அல்லது தீபாவளிக்கு நிச்சயம் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பும்.

1 comment: