Thursday, June 15, 2017

விக்னேஸ்வரன்



அது 2006/2007 காலப்பகுதி இலங்கை தமிழ் மக்களின் தலைமைத்துவம் விடுதலைப்புலிகளால் உறுதிப்படுத்தப்பட்ட காலம் அது . எவரும் இன்னும் சில வருடங்களில் இது வெற்றிடமாகப்போகிறது என்பது பற்றி சிந்தித்திருக்கவில்லை. அக்காலப்பகுதியில் ஞாயிறு தினக்குரலில் நம்முள் கவீரன் என்ற பெயரில் ஒரு பந்தி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. எத்தனை பேர் அப்போது அதனை வாசித்திருந்தார்களோ தெரியவில்லை. (அவற்றின் சில இன்னமும் சில இணையதளங்களில் உள்ளன).  மிக அருமையாக தமிழர் வரலாறும் அரசியலும் அதில் கூறப்பட்டது. அந்த எழுத்துக்களில் காணப்பட்ட ஆளுமை விக்னேஸ்வரனின் தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆயினும்   2013 இல் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக அவர்  தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்ட போது கொழும்பினை அடிப்படையாக கொண்டவர் தம்முடைய பிள்ளைகளை பெரும்பான்மை இனத்தவருக்கு திருமணம் செய்து வைத்தவர் எவ்வாறு வடக்கு மக்களுக்கு தலைமைதாங்கி அவர்களது பிரச்சனைகளை கொண்டு செல்வார் என பலத்த பிரதி வாதங்கள் இடம்பெற்றன. ஆனால் அவற்றை எல்லாம் முறையடித்து 132,255 வாக்குகளுடன் அவர் வடக்கு மக்களுக்கு தலைவனாக தெரிவு செய்யப்பட்ட போதும் கூட அவர் எவ்வாறு வடக்கு மக்களுக்கு உறுதுணை நிற்பார் என கேள்வி எழுந்தது.  அனால் முதலமைச்சராக அவருடைய செயற்பாடுகள் தெற்கு அரசியல்வாதிகளால் இனவாதி என பெயரெடுக்கும் அளவுக்கு அமைந்திருந்தன. இடையில்  கூட்டமைப்பின் தலைமையின் முட்டாள்தனமான செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் பேரவை  என்னும் அமைப்பு தோற்றம் பெற்ற போதே விக்னேஸ்வரனை தூக்கி ஏறிவதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாயின .  இன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அவரது அமைச்சரவையை மாற்ற முயன்ற காரணத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு  மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர்  அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடம் கையளித்துள்ளார்கள். இதன் முடிவு எதுவாக  இருப்பினும் இதன் மூலமாக  அப்பாவி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை முகம் வெளிக்கொண்டு வரப்பட்டது  மகிழ்ச்சியே...

No comments:

Post a Comment