Saturday, October 13, 2012

மாற்றான் தமிழ் சினிமாவை மாற்றான்




தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிக்கொண்டு இருக்கும் போதே கனா கண்டேன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான  கே.வீ. ஆனந்த் அடுத்து வந்த அயன், கோ படங்களின் மூலம்  மூலம்  சூர்யாவுக்கும், ஜீவாவுக்கும் இலாபமும்  ஈட்டித் தரக்கூடிய நாயகன் என்ற அடையாளத்தை வழங்கியவர். அத்தகையவர் ஒன்றரை வருடங்களாக பெறும் பொருட் செலவில் மீண்டும் சூர்யாவை வைத்து எடுத்த திரைப்படம் தான் மாற்றான்.


முன்னைய இரு ஹிட் படங்களில் இணைந்தவர்களில் ஒருவரான ஹரீஸ் ஜெயராஜ் இரண்டு பாடல்கள் தவிர படத்தில் ஏமாற்றத்தையே தந்துள்ளார் அதிலும் பின்னணி இசை முழுச் சொதப்பல் இருப்பினும் சுபா  என்ற பெயருடைய இரு வசனகர்த்தாக்கள் முன்னைய படங்கள் போலவே இதற்கும் மிகச் சிறந்த பங்கை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் முதல் பகுதி நன்றாகத்தான் உள்ளது இரட்டையர்கள் இணைந்து போடும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம் அபாரம்.

கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் ஓடக்கூடிய படத்தின் கடைசி 30 நிமிடங்கள் தான்  பெரிய பலவீனம். Stuck on You படத்தின் கதையுடன் முழுமையான சம்பந்தம் இல்லாத விஞ்ஞானத்துடன் இணைந்த கதை என்பதற்காக 1992 ஒலிம்பிக் போட்டியில் தம்முடைய திறமை மூலம் சோவியத்யூனியனை சேர்ந்த நாடுகள் பெற்றுக்கொண்ட வெற்றியை கதையில் பயன்படுத்திய விதம் இது ஏன் ஏற்கனவே அமெரிக்காவால் வெளிவிடப்பட்ட ஆங்கிலப்படம் ஒன்றின் தழுவலாக இருக்க முடியாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.






கதையில் வரும் எல்லாவற்றுக்கும் காரணம் தேவை தான் அதற்காக படத்தை இழுத்து உக்ரேனில் விஜய், விஜயகாந்த் படங்களில் வருவதை போல சண்டைக் காட்சியை வைத்தது மட்டுமின்றி ஏற்கனவே ஊகிக்கக்கூடிய  இறுதிக் காட்சியில் அவ்வளவு நீண்ட உரையாடலை பயன்படுத்தி தமிழ் சினிமாவை மாற்ற முடியாது என்பதை இந்த இயக்குனரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை மட்டும் தவிர்த்திருந்தாலே நிச்சயம் இந்தக் கூட்டணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்திருக்கும். எப்பிடி இருப்பினும்  இது சூர்யாவுக்கோ அல்லது இயக்குனருக்கோ தோல்விப்படமாக அமையாது.




4 comments:

  1. இன்னமும் பார்க்கவில்லை..பார்க்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் 30 நிமிடங்கள் வரையான காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது இது உண்மையாக இருக்குமெனில் நிச்சயமாக கே.வி ஆனந்துக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

      Delete
  2. படு மோசமான படம் என்று கேள்விப்பட்டேன். பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. என்ன காரணமோ தெரியவில்லை சிலர் மோசமாக விமர்சித்து இருக்கிறார்கள் ஆனால் நிச்சயம் ஒரு தடவை பார்க்கலாம்

      Delete