பல்வேறு
எதிர்பார்ப்புகளுக்கு புறம்பாக இம்முறை
உலக கிண்ணப் போட்டிகளில் காலிறுதிக்கு முன்பாகவே முன்னணி அணிகளான ஜெர்மனி,
ஸ்பெயின், போர்த்துக்கல், அர்ஜெண்டினா
என்பன வெளியேறியுள்ள நிலையில் ஒரே ஒரு
எதிர்பார்க்கப்பட்ட காலிறுதிப் போட்டியான பிரேசில் எதிர் பெல்ஜியம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் அது
தொடர்பிலான முன்னோட்டமாக இந்தப் பதிவு இடம்பெறுகிறது.
வரலாற்று ரீதியாக இவ்விரு அணிகளையும் தனித்தனியே எடுத்து நோக்குவோமேயானால் பிரேசிலின் கை மேலோங்கி இருப்பது வெளிப்படையானது. இதுவரை இடம்பெற்ற 21 உலக கிண்ணப் சுற்றுத்தொடர்களுக்கும் தகுதி பெற்று அவற்றில் 5 உலக கிண்ணங்களை கைபற்றிய அணியாக பிரேசில் விளங்கும் அதே நேரம் இதுவரை 13 உலக கிண்ண சுற்றுத்தொடர்களில் பெல்ஜியம் பங்கேற்றுள்ளது இதில் சிறந்த பெறுதியாக 1986 இல் பெற்றுக் கொண்ட 4 வது இடம் திகழ்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நான்கு தடவைகள் ஒன்றை ஒன்று சந்தித்துள்ளதுடன் 2002 உலக கிண்ண இரண்டாவது சுற்று உட்பட மூன்று போட்டிகளில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளதுடன் 1963 இல் இடம்பெற்ற ஒரு போட்டியில் மாத்திரம் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து
இம்முறை உலக கிண்ண போட்டிகளில் இரு அணிகளின் பயணத்தை எடுத்து நோக்கும்போது ஐரோப்பிய தகுதிகாண்
சுற்றில் H குழுவில் இடம்பெற்ற பெல்ஜியம் மொத்தமாக இடம்பெற்ற 10 போட்டிகளில் ஒரே
ஒரு போட்டியை மாத்திரம் சமநிலையில் முடித்து ஏனைய 9 போட்டிகளில் வெற்றி
பெற்றுள்ளது. இதில் 43 கோல்கள் பெறப்பட்டதுடன் எதிராக 6 கோல்கள் மாத்திரம்
இடப்பட்டுள்ளது இருப்பினும் இக்குழுவில் கிரீஸ்(தரப்படுத்தலில் 44), பொஸ்னியா ஹேர்செக்கோவினா (தரப்படுத்தலில் 42) ஆகிய இரு
அணிகள் மாத்திரம் ஓரளவுக்கு பலம் பெற்ற அணிகளாகும். இதே நேரம் பிரேசில் அணி பலம் பொருந்திய
தென்அமெரிக்க தகுதிகாண் தொடரில் 18 போட்டிகளில் 12 போட்டிகளை வென்று உள்ளதுடன் சிலி அணியுடனான ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியை சந்தித்துள்ளது. அணியால் 41 கோல்கள் பெறப்பட்டதுடன் அணிக்கு எதிராக 11 கோல்கள் மாத்திரம் இடப்பட்டுள்ளது.
பெல்ஜியம்,பிறேசில்
என்பன கடந்த உலக கிண்ணப்போட்டிகளின் போது
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜெண்டினா, ஜெர்மன் அணிகளால் முறையே காலிறுதி, அரையிறுதிப்
போட்டிகளில் வெளியேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து இடம்பெற்ற யூரோ, கோபா அமெரிக்க
சுற்றுத்தொடர்களிலும் காலிறுதிகளில் முறையே
வேல்ஸ், பராகுவே அணிகளால் வெளியேற்றப்பட்டன. இந்நிலையில் 2016 ஆகஸ்டில்
பெல்ஜியம் அணிக்காக இங்கிலாந்தில் எப்.ஏ
கிண்ணத்தை விகன் அத்லேட்டிக் அணிக்காக வென்ற ராபர்டோ மாட்டினஸ் நியமிக்கப்பட்டதுடன் 2016
ஜூனில் பிரேசில் அணிக்காக பிரேசில் கழகமான கொறின்தியன்ஸ் அணிக்காக பீபா உலக கழக
கிண்ணம் மற்றும் பிரேசிலின் சீரிய ஏ
கிண்ணங்களை பெற்ற டிட்டே நியமிக்கப்பட்டார்.
அணிகள்
இரு
அணிகளும் பல நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளன. பெல்ஜியம் அணி பல தசாப்தங்களுக்கு
பிறகு தலைசிறந்த வீரர்களைக் கொண்ட தலைமுறையைக் கொண்டுள்ளது. அந்த வகையில் முன்களத்தை
பொறுத்த வரை இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் விளையாடும் தலைசிறந்த வீரர்களான கெவின் டி புருனி(இறுதி பருவத்தில் அதிக கோல்
உதவிகளை வழங்கியமைக்கான விருதினை
பெற்றவர்), ஈடன் ஹசார்ட்(எதிரணி வீரர்களை ஏமாற்றி
பந்தை முன் கொண்டு செல்வதிலும் பந்தை வைத்திருப்பதிலும் தலை சிறந்த வீரர்) ,டிரயிஸ் மாட்டினஸ்(நேபோலி), ரொமேலு லுக்காகு(மன்செஸ்டர் யுனைட்டட்) என்ற
சிறந்த முன்கள ஆட்டக்காரர்களையும் ,
மத்திய களத்தில் பெலேணி, விட்சல்,சண்டி ஆகியோரையும் சிறகு பின்களத்தில் கரோஸ்கா,
தோமஸ் முனீர் ஆகியோரையும் பின்களத்தில் அனுபவ வீரரான மன்செஸ்டர் சிட்டியின்
தலைவர் வின்சன்ட் கொம்பனியையும்
இவற்றுக்கு மேலதிகமாக பிரீமியர் லீக்கின்
தலை சிறந்த கோல் காப்பாளர்களுள் ஒருவரான தீபனுட் கோடாய்ஸ்
ஐயும் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமது லீக்குகளில் திறமையை வெளிப்படுத்தி
போதிலும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் சிறந்த பெறுதியையும் அனுபவத்தையும்
கொண்டிராமை ஒரு பலவீனமாக நோக்கப்படுகிறது.
அடுத்து
பிரேசில் அணியை எடுத்து நோக்கும்போது முன்
களத்தில் உலகில் கூடிய பெறுமதிக்கு வாங்கப்பட்ட பாரிஸ்
செயின்ட் ஜெர்மனின் நெய்மார் , மான்செஸ்டர் சிட்டியின் கேப்ரியல் ஜீசஸ் , லிவர் பூலின் ராபர்டோ பிர்மினோ , செல்சியாவின் வில்லியன் , ஜுவாண்டஸ் வீரர் டக்ளஸ் கோஸ்டா ஆகியோரையும் மத்திய
களத்தில் பார்சிலோனாவின் கொன்டின்ஹோ, பவுலியோ, ரியல் மட்ரிட்டின் கேஸேமிரா,
மான்செஸ்டர் சிட்டியின் பெர்னாண்டின்ஹோ ஆகியோரையும் , வலது ,
இடது பின் களத்தில் முறையே மான்செஸ்டர் சிட்டியின்
டேனிலோ , ரியல் மட்ரிட்டின் மார்ஸலோவையும், பின்களத்தில்
அனுபவம் வாய்ந்த முன்னால் அணித்தலைவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மனின் தியாகோ
சில்வா, இன்டர் மிலன் வீரர்
மிராண்டா ஆகியோரையும் கோல்காப்பில் ரோமாவின்
அலிசனையும் கொண்டுள்ளது. இவ்வீர்களில் பெரும்பாலானவர்கள்
இம்முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் நோக் அவுட் சுற்று போட்டிகளில்
பங்கு பற்றி இருக்கின்றமை அணிக்கு ஒரு சாதகமான விடயமாகும்.

இப் போட்டியின்
ஏனைய குறிப்பிடத்தக்க விடயங்கள் எனப் பார்க்கும் போது தகுதிகான் சுற்று உட்பட இந்த உலக கிண்ண போட்டித்
தொடரில் ஆரம்பத்தில் சிலியுடன் பெற்ற
தோல்விக்கு பின் 21 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக பிரேசில் திகழ்கிறது. சினேகபூர்வ
போட்டிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது இறுதியாக அர்ஜெண்டினா அணியுடன் அடைந்த
தோல்விக்கு பின் 15 போட்டிகளில் தோல்வியை
சந்திக்க வில்லை அதே நேரம் பெல்ஜியம் அணியும் இறுதியாக வேல்ஸ் அணியுடன் அடைந்த
தோல்விக்கு பின் 24 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அணியாக திகழ்கிறது. இம்முறை
உலக கிண்ணத்தில் அதிக கோல்களை போட்ட அணியாக பெல்ஜியம் காணப்படும் அதே நேரம் பிரேசில் அணியின் எதிராக கோலை நோக்கி வெறும் 5 சொட்களே
அடிக்கப்பட்டுள்ளன. இறுதி 12 போட்டிகளில் பிறேசில் அணிக்கு எதிராக 2 கோல்கள்
மட்டும் போடப்பட்டுள்ளமை இங்கு முக்கிய அம்சமாகும்.
அணிகளில்
இடம்பெறக்கூடிய மாற்றங்களை எடுத்து நோக்கும்போது பிரேசில் அணியை பொறுத்த வரை பிலிப் லூயிஸ் ற்கு பதிலாக காயத்தில் இருந்து
மீண்ட மீண்டும் மார்சலோ இடம் பிடிப்பது கோல் போடும் வாய்ப்புகளை அதிகரித்தாலும் தடுப்பாட்டத்தில் பிரேசிலுக்கு பாதிப்பாக அமையலாம் . இதே போன்றே தடுப்பு மத்திய தூணாக
விளங்கிய பெல்ஜியம் அணியின் உயரமான வீரர்களுக்கு சவால் விடுக்கக்கூடிய கேஸேமிரா
ஏற்கனவே இரண்டு மஞ்சள் அட்டைகளை பெற்றமை காரணமாக
நாளைய போட்டியில் விளையாட முடியாமை
பிரேசிலுக்கு பாதகமாக அமையலாம். இவரது இடத்தில் விளையாடவுள்ள பெர்னாண்டின்ஹோவால்
தடுப்பாட்டத்தில் கேஸேமிராவை நெருங்கவே முடியாது
கடந்த உலக கிண்ண அரையிறுதியில் அணி தலைவர் தியாகோ
சில்வா இதனையொத்த நிலை காரணமாக விளையாட முடியாமை 7-1 என்ற பாரிய
தோல்வியை ஏற்படுத்தி இருந்தமை இங்கு
குறிப்பிடத்தக்கது.காயத்தில் இருந்து மீண்ட டக்ளஸ் கோஸ்டா அணிக்கு திரும்பினாலும்
கடந்த போட்டியில் வில்லியம் வெளிப்படுத்திய திறமை அவரை தொடக்க அணிக்கு
அனுமதிக்காது. கடந்த பருவத்தில் கடந்த
போட்டியில் கோலை பெற்றுக்கொண்ட ராபர்டோ பிர்மினோ பலராலும் அணியில் இடம்பெறவேண்டியவராக குறிப்பிடப்பட்டாலும் கடந்த பருவத்திலும் மிக சிறந்த ஆட்டத்தை
லிவர்பூல் அணிக்காக இவர் வெளிப்படுத்தி இருந்தாலும் டிட்டோவின் மாற்ற முடியாத
தெரிவாக கேப்ரியல் ஜீசசே காணப்படுகிறார். இதுவரை எந்த
வொரு கோலையும் போடாத போதிலும் தகுதிச்சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை அவரை
தொடர்ந்து நிலைக்க செய்கிறது.
இதே நேரம் பெல்ஜியம் அணியை பார்க்கும் போது கடந்த
போட்டியில் சிறப்பாக செயற்பட்ட சிறகு வீரர் கரோஸ்காவுக்கு பதிலாக கடந்த போட்டியில் வெற்றிக் கொலை அடித்த சண்லி இடம்பெற
கூடியதுடன் மத்திய களத்தில் ஆடும் கெவின் டி புருனி முன்னால் விளையாடுவதற்காக டிரயிஸ்
மாட்டினஸ் நீக்கப்பட்டு கடந்த போட்டியில்
சிறப்பாக செயற்பட்ட பெலேணி உள்நுழைக்கப் படலாம்.
தனிப்பட்ட ரீதியின் இந்த தொடரில் வீரர்களின் திறமையை பார்க்கும்போது தங்க காலனி போட்டியில் இங்கிலாந்தின் ஹரி கேனின் 6 கோல்களுக்கு அடுத்ததாக ரொமேலு லுக்காகு பெற்ற 4 கோல்கள் காணப்படுகின்றன. அதே நேரம் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அதிகமாக 23 சொட்களை அடித்தவர், அவற்றில் கோல் கம்பத்தை நோக்கி அதிகமாக 12 சொட்களை அடித்தவர் கூடிய 16 கோல் போடும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர் என பல இடங்களில் முன்னிலை வகிக்கிறார் (பெல்ஜியம் அணி வீரர்கள் கெவின் டி புருனி, ஈடன் ஹசார்ட் அவரை விட ஒரு போட்டி குறைவாக விளையாடினார்கள் )
இறுதியாக,
இந்த தொடரில் பல முன்னிலை அணிகள் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் 2002 ற்கு
பின்னராக 16 வருட காத்திருப்புக்கு இம்முறையாவது
பலன் கிடைக்குமா என பிறேசில் எதிர்பார்த்து இருக்க கடந்த இரு சுற்றுத் தொடர்களின் காலிறுதி
தோல்வியை மாற்றியமைத்து நாட்டின்
வரலாற்றில் தமக்கு கிடைத்த தலைசிறந்த
வீரர்களை கொண்ட இந்த அணியை பயன்படுத்தி உலக கிண்ணத்தை வெல்லக்கூடிய ஒரே வாய்ப்பினை இழக்க பெல்ஜியமும் தயாராக இல்லை.
No comments:
Post a Comment