Monday, April 15, 2019

கேம் ஒப் த்ரோன்ஸ் (Game of Thrones)



கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கேம் ஒப் த்ரோன்ஸ் இனது இறுதிப் பாகம் இன்று இலங்கை நேரப்படி காலை 6.30 க்கு ஒளிபரப்பாகியது. முன்னொரு போதும் இல்லாத வகையில் இம்முறை இதற்கான எதிர்பார்ப்பு மிகக் கூடியதாகவே இருந்தது. ஒன்றரை வருட இடைவெளி இது பற்றி தெரியாத பலரை இதற்கு நிச்சயம் அடிமையாக்கி இருக்கும் என்றே கூற முடியும். அப்படி என்னதான் இதில் இருக்கிறது எனப் பார்த்தால் எவராலும் இலகுவில்  ஊகிக்க முடியாத எந்த வொரு இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத தொய்வில்லாத திரைக்கதையையும் அது செல்லும் வேகமும் இதற்கு  காரணமாகின்றன.



ஏழு ராஜ்ஜியங்கள் ஒரு சிம்மாசனத்திற்காக அடிபடுவதே இதன் பிரதான எண்ணக்கருவாகும். ஒவ்வொரு பாகத்திலும் ஏதாவது ஒரு பிரதான பாத்திரத்தின் மறைவு அடுத்துவரும் பாகங்களை மேலும் விறுவிறுப்பாக்குகின்றன . பாரிய எண்ணிக்கையான பாத்திரங்களின் படைப்பு இதனை பார்க்க ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் இணையத்தில் மேலும் அவை தொடர்பிலான தேடலை உருவாக்கி இருந்தன .

ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் எனும் எழுத்தாளரால் எழுதப்பட்ட எ சொங்ஒப்  ஐஸ் அண்ட் ஃபயர் எனும் கற்பனை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத் தொடர் HBO வில் ஒலிபரப்பாகிவருகிறது, இருப்பினும் நான் உட்பட இதனை இணையம் மூலமாக பதிவிறக்கி பார்த்த நபர்களின் எண்ணிக்கை அதனை விட எத்தனையோ மடங்கு அதிகமானது. வரலாற்றில் அதிக விருதுகளை பெற்ற ஒரே தொடராகவும் இது விளங்குகிறது.பிரதான பாத்திரங்களில் ஒருவராக வரும் பீட்டர் டிங்க்லேஜ்  2011, 2015 ,2018 ஆகிய மூன்று வருடங்களும் சிறந்த துணை நடிகருக்கான எமி விருதை பெற்றிருந்தார். 



இதன் கதையை சுருக்கமாக கூறுவதாக இருந்தால் கூட இந்த ஒரே பதிவு இதற்கு போதாது இணையம் முழுவதும் இது தொடர்பிலான மீம்களும் பல்வேறு கட்டுரைகளும் குவிந்து உள்ளன. எனவே இதன் பாத்திரங்கள் தொடர்பிலான சுருக்கமான சில  படங்களை மாத்திரம் இங்கு இட்டுள்ளேன்.


என்னைப் பொறுத்த வரை இதில் உள்ள ஒரே குறைப்பாடாக  இதில் உள்ள வயது வந்தவர்கள் மாத்திரம் பார்க்க முடிந்த  காட்சிகளாகும் இவை கதையுடன் இணைந்து வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பினும் குடும்பத்துடன் பார்க்க முடியாததாக காணப்படுகின்றது. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே இது தொடர்பிலான அறிவிப்பு காணப்படுகிறது.


இதுவரையான 7 பருவங்களின் தொகுப்பு வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது .



No comments:

Post a Comment